தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான்.
இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது.வரலட்சுமி சரத்குமார் அவர்களின் மகள் என்பதை தாண்டி தனக்கென்று ஒரு பெயரை தமிழ் சினிமாவில் எடுத்துவிட்டார்.
இவர் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார்.
பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.
இதனை தொடர்ந்து, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி’ என படங்கள் குவிந்தது.
வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் .சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் எப்போது உங்களது திருமணம் என்ற கேள்வியை எழுப்பினார்.
இந்த கேள்விக்கு சட்டென்று கோபமான வரலட்சுமி, திருமணம் எப்போது என்ற கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்க வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார்.