ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இது தான் – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க..!

 

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் சீரியலில் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார். 

 

சீரியல் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைய மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியை அடுத்து கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்கள் வரிசையாக இவரது நடிப்பில் வெளியாகின.

 

தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் இவர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. 

 

 

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

 

காமெடி கலந்த பொழுதுபோக்கான இந்த படத்திற்கு “ஹாஸ்டல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் ஆண்கள் தாங்கும் விடுதியில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

இதில் விடுதியின் பாதுகாவளர் (வார்டன்) வேடத்தில் நடிகர் நாசர் நடித்துள்ளார். இதில் அசோக் செல்வன் கடைசி ஆண்டு படிக்கும் மாணவனாக நடித்துள்ளார். இவருடன் சதீஷ், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி பிரபலம் யோகி, ரவி மரியா, கிருஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

 

இந்த படத்திற்கு, குளிர் 100 டிகிரி படத்திற்கு இசையமைத்த போபோ சாஷி தான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த படத்தின் வேலைகள், நேற்று நிறைவடைந்தன. 

இந்த தகவலை படக்குழுவினருடன் இருக்கும் போட்டோவுடன் அசோக் செல்வன், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படம் 2015 ல் வெளியான மலையாள காமெடி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam