நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களிலிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் கோக்கு மாக்காக வர்ணித்து கருத்து தெரிவிப்பது வழக்கம்.
அதனை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில், சமீபத்தில் யூ-ட்யூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவரை பற்றிய மீம்களுக்கு அவருடைய பதில் என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதில், இந்த மாதிரி ஆண்ட்டிகளை பார்த்தாலே ஒரு வெறி வருது சார் என்ற மீம்-ஐ காட்டி இதற்கு உங்கள் பதில் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “மனவளர்ச்சி குன்றியவர்கள் தான் இப்படியான வேலைகளை செய்கிறார்கள். அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. முதலில் கவனித்திலேயே எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படியே விட்டு விடுவேன்.
நான் நிறைய விஷயங்களை பாத்துட்டு உக்காந்துட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் கவலைப்படும் இடத்தில் நான் இல்லை என்று எடுத்துக்கொள்வேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.