தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் என்ன தான் பிரபலமானவர்களாக, திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் என்பது ஹீரோக்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.
இதுகுறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் சமந்தா. அவர் கூறுகையில், ”நடிகைகளுக்கு சம்பளம் என்பது குறைவான அளவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் மூன்று நடிகைகளில் ஒருவராக முன்னணியில் இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஹீரோக்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது.
அந்த சம்பளமானது முதல் 20 நடிகர்கள் பட்டியலில் இல்லாத நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட குறைவானதாகவே உள்ளது. இதை சுட்டிக்காட்டி நடிகைகள் சம்பளத்தை அதிகமாக கேட்டால் பிரச்சினையாக்கி விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்கள் படத்துக்குப்படம் கோடிகளை உயர்த்தினாலும் மறுபேச்சு பேசாமல் கொடுக்கிறார்கள்.
இது என்ன நியாயம் என்று தனது கருத்தினை துணிச்சலாக தெரிவித்துள்ளார் சமந்தா. மேலும், ‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
நடிகையாக எவ்வளவு உயரத்துக்கு போனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பதற்றம் இருக்கும். படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னை துரத்தும். இயக்குனர், கேமராமேன் ஏதாவது சொன்னால் பதற்றம் இன்னும் உச்சத்துக்கு போய் விடும்.
ஆனால் அதை யாருக்கும் தெரிகிற மாதிரி காட்டிக்கொள்ள மாட்டேன். புதிய நடிகையாக அந்த கதாபாத்திரத்துக்குள் செல்ல வேண்டும் என்ற உணர்வும், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடிக்க வேண்டும் என்ற வெறியும்தான் அந்த பயத்துக்கு காரணம். 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்.
இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.” இவ்வாறு சமந்தா கூறினார்.
தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வரும் இவர் அடிக்கடிஉடற்பயிற்சி செய்து அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.