தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
பிரபுதேவாவை காதலித்த போது கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வந்தார். தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள்.
மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.
இந்நிலையில், சரத்குமாருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து தலைமகன் என்ற படத்தில் நடிக்கும் போது எடுத்துக்கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துவருகின்றன.
சகலமும் எடுப்பாக தெரியும் படி இறுக்கமான உடையில் அவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.