தமிழில் வந்த ஒரு சில திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹா ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட்டில் வந்த படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார்.
சூது கவ்வும் திரைப்படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக பாபி சிம்ஹா நடித்திருந்தார். அது முதல் பாபி சிம்ஹாவிற்க்கு வரவேற்பு அதிகமாக துவங்கியது.
ஆனால் அதற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடித்த நடிப்புதான் பெரும்பாலும் தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்ட நடிப்பாக இருந்தது.
சூதுக்கவ்வும் படத்தில் வரவேற்பு:
ஏனெனில் அதற்கு முன்பு சூது கவ்வும் திரைப்படத்திலிருந்து பாபி சிம்ஹாவிற்கும் ஜிகர்தண்டா திரைப்படத்தில் இருந்த பாபி சிம்ஹாவிற்கும் பெரும் மாற்றங்கள் இருந்தன. விஜய் சேதுபதி போலவே எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவர் பாபி சிம்ஹா.
ஆனால் அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த கதைகளங்கள் சிறப்பாக அமையாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை அவரால் பெற முடியவில்லை. இருந்தாலும் அவருடைய நடிப்பை அடையாளம் கண்டு கொண்டு சிலர் அவருக்கு வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். உதாரணத்திற்கு இறைவி, பேட்ட மாதிரியான திரைப்படங்களைக் கூறலாம்.
இந்திய அளவில் வாய்ப்பு:
இந்த நிலையில் பேன் இந்தியா திரைப்படமான சலார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் பாபி சிம்ஹா. சலார் திரைப்படம் இந்தியாவில் வெளியான பெரிய திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்திற்கு பிறகு பாபி சிம்ஹாவின் மார்க்கெட் என்பது அதிகரித்தது.
மேலும் அவரது நடிப்பை பார்த்துதான் இயக்குனர் பிரசாந்த் நீலும் அந்த திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பை கொடுத்திருந்தார். தொடர்ந்து தற்சமயம் சங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படத்திலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இனி அவருக்கு அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் இவர்கள் இருவரும் இணைந்து உறுமீன் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
அந்த சமயத்தில்தான் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் பாபி சிம்ஹா தனது மகள் மகன் மற்றும் மனைவியுடன் எடுத்த குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது
Loading ...
- See Poll Result