பிரியங்கா அப்படி பேசுனது.. கடுப்பான பிரபலம்.. என்ன இவரே இப்படி சொல்றாரு..!

கடந்த இரு தினங்களாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த பஞ்சாயத்து தான் இருந்து வருகிறது. விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது.

பொதுவாக சின்னத்திரை சேனல்கள் எல்லாம் நாடகங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருவது உண்டு. ஆனால் ஆரம்பம் முதலே நாடகத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ரியாலிட்டி ஷோக்களுக்கும் கொடுக்கும் ஒரு டிவியாக விஜய் டிவி இருந்து வருகிறது.

பிரியங்கா அப்படி பேசுனது

அந்த வகையில்தான் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியது விஜய் டிவி. முதல் சீசனில் இந்த நிகழ்ச்சிக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. ஆனால் இரண்டாவது சீசனில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.

 

அதில் முதல் சீசன் முதலே கோமாளியாக இருந்து வரும் மணிமேகலைக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. எனவே இந்த சீசனில் குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கினார் மணிமேகலை.

கடுப்பான பிரபலம்

இதற்கு நடுவே மணிமேகலையை அவரது வேலையை செய்யவிடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார் வி.ஜே பிரியங்கா என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல வீடியோ ஒன்றை வெளியிட்ட மணிமேகலை வி.ஜே ப்ரியங்கா தனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் குக் வித் கோமாளியில் இருந்து விலகி இருப்பதாக அவர் அந்த காணொளியில் கூறி இருந்தார்.

மேலும் அவர் கூறும்போது என்னை என் வேலையை செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். அவருக்கு அடங்கி போனால் எனக்கு விஜய் டிவியில் இன்னமும் நிறைய நிகழ்ச்சிகள் கிடைக்கும் என கூறுகிறார்கள். எனக்கு அதெல்லாம் தேவை இல்லை. நம் திறமையால் எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஆனால் ஒருத்தருக்கு கீழ் அடங்கி போனால்தான் கிடைக்கும் என்றால் அது தேவையில்லை என கூறியுள்ளார் மணிமேகலை.

இவரே இப்படி சொல்றாரு

பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர். இந்த நிலையில் இதற்கு முன்பு நிகழ்ச்சிகளில் வி.ஜே பிரியங்கா செய்த தவறுகளை வீடியோவாக வெளியிட்டு வந்தனர். அதில் ஒரு வீடியோவில் பிரியங்காவின் அட்ராசிட்டி தாங்க முடியாமல் பேசிய செஃப் தாமு இது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இங்கே நாங்கள் வைத்தது தான் சட்டம் என பேசி இருப்பார் அந்த வீடியோவை பகிர்ந்து வைரல் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

--- Advertisement ---

Check Also

rathan tata october october

86 வயசு டாடாவின் 29 வயது நெருங்கிய நண்பர்.. யார் அந்த இளைஞர்.. கேட்டா அசந்து போயிடுவீங்க.!

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்து வரும் …