என்னது.. இவரு தான் குக் வித் கோமாளி டைட்டில் வின்னரா..? லீக்கான தகவல்..! கடுப்பில் ரசிகர்கள்..!

தற்சமயம் சமூக வலைதளங்களில் மக்கள் அதிகமாக பேசி வரும் விஷயமாக குக் வித் கோமாளி தொடர்பான விஷயங்கள்தான் இருந்து வருகிறது. பல வருடங்களாக கோமாளியாகவும் தற்சமயம் தொகுப்பாளராகவும் இருந்து வரும் மணிமேகலை வெளியிட்ட ஒரு பதிவு தான் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணிமேகலை அந்த பதிவில் கூறும் பொழுது நான் குக் வித் கோமாளியில் பணி புரிவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முக்கியமாக அங்கு குக்காக வந்திருக்கும் தொகுப்பாளர் ஒருவர் இருக்கிறார். அவர் தொடர்ந்து என்னை என் வேலைகளை செய்ய விடாமல் தடுத்து வருகிறார்.

டைட்டில் வின்னரா?

இது குறித்து யாரிடம் நான் கூறினாலும் அவரை அனுசரித்துப் போகும்படி கூறுகிறார்கள். அப்படி செய்வதன் மூலம் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவையே கிடையாது.

எனவே நான் குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார் மணிமேகலை. இந்த செய்தி தான் இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மணிமேகலை கூறிய அந்த நபர் வேறு யாருமல்ல வி.ஜே பிரியங்காதான் என்று மக்கள் கூறி வருகின்றனர்.

லீக்கான தகவல்

மேலும் விஜே பிரியங்காவையும் அவர்கள் பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது அதன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் அந்த நிகழ்ச்சி முடிவடைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பிரியங்காதான் ஜெயிக்க இருப்பதாக ஒரு பேச்சுக்கள் இருந்து வருகிறது. முடிவில் அவரை தான் டைட்டில் வின்னராக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மக்களுக்கு மேலும் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடுப்பில் ரசிகர்கள்

ஏற்கனவே பிரியங்கா குறித்து மோசமான விமர்சனங்களை அளித்து வரும் பலரும் கூறும்பொழுது விஜய் டிவியும் சேர்ந்து அதை தாக்கத் தொடங்கி இருக்கின்றனர். தமிழ் பெண்ணான மணிமேகலைக்கு வாய்ப்பை கொடுக்காமல் வேற்று மொழியை சேர்ந்த பிரியங்காவை ஏன் விஜய் டிவி வளர்த்து விடுகிறது என்றெல்லாம் பேச துவங்கி விட்டனர் நெட்டிசன்கள்.

ஆனால் இப்பொழுது வரை இந்த நிகழ்வு குறித்து பிரியங்கா எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை. இதனால் அவர் அவரது தவறை ஒப்புக்கொண்டார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர் தவறு செய்யவில்லை என்றால் அதை நிரூபிப்பதற்கு இந்நேரம் அவர் ஏதாவது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்க வேண்டும். அல்லது ஒரு பதிவாவது போட்டிருக்க வேண்டும் எதுவுமே செய்யவில்லை என்றும் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்

--- Advertisement ---

Check Also

rathan tata october october

86 வயசு டாடாவின் 29 வயது நெருங்கிய நண்பர்.. யார் அந்த இளைஞர்.. கேட்டா அசந்து போயிடுவீங்க.!

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்து வரும் …