Connect with us

News

கொக்கு வித் கோமாளி புகழுக்கு டும்…டும்….கொட்டி மனைவியான காதலி ரியா

By TamizhakamSeptember 2, 2022 5:55 PM IST

தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா காலத்திலும் எல்லோரையும் வீட்டிற்குள் கட்டிப்போட்ட ரீயல் ரியாலிட்டி ஷோ.  

 2019 ஆண்டு நவம்பர் 16, முதல் 2020 பிப்ரவரி 23, வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி  தான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆகும்.

இன்று இருக்கும் தலைமுறைகளின் சமையல் திறன் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அது போல ஆண்களும் கட்டாயம் சமைக்க தெரிந்தது இருந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கையில் சர்வைவல் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இந்வகையில் விஜய் டிவியில் நடத்தப்படும் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பெரும் புகழ் அடைந்த புகழ் தற்போது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தனது குக் வித் கோமாளி குழுவினரான ரம்யா பாண்டியன், பவித்ராவிடம் செய்த வம்புகள் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.

இவர் தனது மூன்றாவது சீஸனில் தான் காதலித்து வந்த பெண் பென்சி ரியாவை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். கோவையைச் சேர்ந்த இந்தப் பெண்ணை கலை நிகழ்ச்சியின் போது சந்தித்ததாகவும் பின்பு இவர்களது நட்பு எப்போதும் போல் காதலாக மாறியதாக கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவரின் திருமணமானது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி இருந்தது எனினும் தற்போது வலைதளத்தில் வந்துள்ள படங்களைப் பார்க்கும்போது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

தற்போது திடீரென்று இவர்களின் திருமணம் தங்களது குடும்ப நபர்களுடன் நடந்திருப்பது போல உள்ள படங்கள் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது அதுவும் மிக எளிமையாக என்பதை காட்டுகிறது.

புதுமண தம்பதிகளான இவர்களுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகைச் சான்றோர்களும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இப்போது இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்ககூடிய ஆகஸ்ட் 16 1947, மிர்ச்சி சிவாவின் காசேதான் கடவுளடா, சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம்,  விஜயசேதுபதி  ஒரு படத்திலும்  நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top