Connect with us

News

«தயிர் இருந்தா போதும்..!» – அழகு ராணியா மாறலாம்..!

By TamizhakamMärz 21, 2023 7:30 AM IST

நான் உண்ணும் தயிர் நமது சருமத்திற்கு மிகவும் அற்புதமான பளபளப்பை கொடுப்பதோடு அழகுக் கலையில் மிக உன்னதமான வேலையை செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

ஆனால் அது முற்றிலும் உண்மையானது. தயிர் ஒன்றை வைத்து நீங்கள் எண்ணற்ற வழிகளில் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த வகையில் தயிறை வைத்து நீங்கள் என்னென்ன செய்ய முடியும். அப்படி செய்வதால் நீங்கள் எப்படி அழகோடு மிளிருவீர்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அழகு கலையில் தயிரின் பங்கு

வறண்ட கூந்தல் இருப்பவர்கள் தயிரோடு எலுமிச்சை சாறு கலந்து வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை உங்கள் தலையில் தடவி மசாஜ் செய்து வருவதன் மூலம் தலைமுடியில் இருக்கக்கூடிய வறட்சி நீங்கும்.

இளம் வயதில் இருக்கும் ஆண்களும் பெண்களும் முகத்தில் ஏற்படுகின்ற முகப்பருவை நீக்க தயிருடன் கடலை மாவை சேர்த்து முகத்தில் பூசி சில மணி நேரங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுவது மூலம் முகப்பருக்கள் அடியோடு மறைந்துவிடும்.

உங்கள் சருமம் வறண்டு டல்லாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தயிருடன் தேனைக்கலந்து உங்கள் சருமங்களில் பூசி விட்டு மறுநாள் குளித்து விடுங்கள். எப்படி செய்வதின் மூலம் உங்கள் சரும வறட்சி நீங்கி சருமம் பளபளப்பாகும்.

பொடுகு தொல்லையில் இருப்பவர்கள் தயிரோடு சிறிது துளசி சாறு, எலுமிச்சை சாறு கலந்து உங்கள் தலையில் இருக்கக்கூடிய முடிகளின் வேர் கால்களுக்கு செல்லும்படி நீங்கள் நன்கு மசாஜ் செய்து தேய்த்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து உங்கள் முடியை அலசுவதின் மூலம் பொடுகு தொல்லையிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

தயிரோடு மஞ்சள் தூளை சேர்த்து நன்கு குழைத்து உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்பு பகுதியில் போட்டு விடுங்கள் இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்வதின் மூலம் பாதத்தில் இருக்கக்கூடிய வெடிப்பு எளிதில் மறையும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top