Connect with us

News

«மாறாத இளமையில்…» – மாடர்ன் உடையில் ஜொலிக்கும் நடிகை தேவதர்ஷினி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

By TamizhakamJanuar 27, 2022 5:53 PM IST

ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர் தேவதர்ஷினி ( Devadarshini ). அமேசான் பிரைம் ஓடிடியில் சமீபத்தில் வெளியான ஃபேமிலி மேன் 2 இணையத்தொடரில் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

‹மர்ம தேசம்› தொடங்கி, டி.வி., சினிமா என எல்லாவற்றிலும் தன் தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தவர் தேவதர்ஷினி. விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் நகைச்சுவை நடிகைகளில் மிக முக்கியமானவர்.

சைகாலஜியில் எம்.ஏ பட்டம் பெற்றவர், இப்போது கவுன்சலிங்கும் செய்துவருகிறார்.டி.வி. தொகுப்பாளினி, சீரியல் நடிகை என படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் தேவதர்ஷினி.அதிலும் »மர்மதேசம்» தொடர் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இதையடுத்து »பார்த்திபன் கனவு» படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ‹சின்ன பாப்பா பெரிய பாப்பா› நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார்.

தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான »காஞ்சனா» திரைப்படத்தில் கோவை சரளாவோடு தேவதர்ஷினி இணைந்து செய்த காமெடி செம்ம வொர்க்-அவுட் ஆனது.

அதன் பின்னர் »காஞ்சனா – 2»விலும் பட்டையைக் கிளப்பினர். இப்போது அக்கா, அண்ணி கேரக்டர் என்றாலே கூப்பிடு தேவதர்ஷினியை எனும் அளவிற்கு திரையுலகில் பெயர் எடுத்துவிட்டார்.

தற்போது, 46 வயதாகும் இவர் இன்னும் இளம் நடிகை போலவே இருக்கிறார்.இந்நிலையில், குடும்பத்துடன் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், மாறாத இளமையுடன்.. அப்படியே இருக்கீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top