Connect with us

News

தேவயானியின் வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

By TamizhakamApril 2, 2024 9:24 PM IST

ஒரு நடிகையின் எதிர்கால வாழ்க்கை என்பது எப்படி வேண்டுமானாலும் மாறிப்போகலாம். தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகைகள் புகழின் உச்சியில் இருந்துவிட்டு, ஒரு காலகட்டத்துக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு காணாமல் போயிருக்கின்றனர். இதில் நடிகர்களும் விதிவிலக்கல்ல.

ஆனால் ஒரு சில நடிகைகள் சினிமாவை விட நிஜ வாழ்க்கையை மிக அற்புதமாக அமைத்துக்கொள்கின்றனர். வாழ்க்கையை உணர்வு பூர்வமாக அழுத்தமாக வாழ்கின்றனர்.

தேவயானி

நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நின்றவர். கடந்த 1990களில் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

குறிப்பாக காதல் கோட்டை, சூரிய வம்சம், தெனாலி, கும்மிப்பாட்டு, தென்காசிப்பட்டணம், நினைத்தேன் வந்தாய், ஆனந்தம், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்,

அதிலும் சூரியவம்சம் படத்தில் தேவயானி செய்த இட்லி உப்புமா மிக பிரபலம். அதே போல் ஒரே பாடலில் அவர் கலெக்டராகி விடுவதும் விக்ரமன் படங்களில் மட்டுமே இதுவெல்லாம் சாத்தியம் என கிண்டலடித்தவர்களும் உண்டு.

ராஜகுமாரனுடன் திருமணம்

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு, நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற 2 படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். தேவயானியும் இவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணத்தை தேவயானியின் பெற்றோர் ஏற்கவில்லை.

ஆனால் கணவருடன், தன் மகள்கள் இனியா மற்றும் பிரியங்காவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் தேவயானி.

அந்தியூரில் பண்ணை வீடு

தேவயானி – ராஜகுமாரனுக்கு சொந்தமான பண்ணை வீடு ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள எண்ணமங்கலத்தில் உள்ள ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் இந்த பண்ணை வீடு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?

இங்கிருந்து சிறிது தொலைவில்தான் இயக்குனர் ராஜகுமாரனின் சொந்த ஊரான சந்தியாபாளையம் உள்ளது. ஆனால் அங்கு அவருக்கு எதுவும் பரம்பரை சொத்துகள் இல்லை.

தேவயானியின் இந்த பண்ணை வீட்டை சுற்றிலும் உள்ள விவசாய நிலத்தில் ஏராளமான மா, பலா, தென்னை மரங்கள், தேக்கு மரங்கள் உள்ளன. பூக்கள், காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. போர்வெல் போடப்பட்டு, கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கப்படுகிறது.

விவசாயத்தில் ஆர்வம்

சென்னையில் இருந்தாலும் மாதம் ஒருமுறை தங்களது பண்ணை வீட்டுக்கு குடும்பத்துடன் தேவயானி வந்துவிடுகிறார். அங்கு விவசாய பணிகளில் ஈடுபடுகின்றனர். விவசாயத்தில் 5 சதவீத லாபம் கூட இல்லை என்றாலும் ஆத்ம திருப்தி கிடைப்பதாக தேவயானி கூறியிருக்கிறார்.

ஆசிரியர் பணி

அதேபோல் சென்னையில் அண்ணாசாலையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில், கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒப்பந்த ஆசிரியராக பணிபுரிந்து வரும் தேவயானி 1 முதல் 5 வகுப்புகளுக்கு பாடம் நடத்துகிறார்.

இதையும் படியுங்கள்: திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

இதற்காக முறைப்படி ஆசிரியர் பயிற்சி முடித்த தேவயானி, பள்ளிக்கு போகும் நேரம் தவிர மற்ற நாட்களில் பண்ணை வீட்டுக்கு வருவது, சினிமா மற்றும் சீரியலில் நடிப்பது என்று தனது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top