Connect with us

News

«நீங்கள் பயன்படுத்த எளிமையான வீட்டு குறிப்புகள்..!» – மிஸ் பண்ணாம யூஸ் பண்ணி பாருங்க..!

By TamizhakamMärz 19, 2023 7:00 AM IST

வெயில் காலம் வந்து விட்டாலே ஈக்களுக்கு கொண்டாட்டம் தான். எங்கு பார்த்தாலும் அப்படியே மொய்த்துக்கொண்டு இருக்கும். இதனை பார்க்கும் போதே நமக்கு ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஈக்கள் அங்கும் இங்கும் மொய்த்துக் கொண்டிருக்கும்.

 எந்த ஈக்களை உங்கள் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கவும், கட்டுப்படுத்தவும் நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது அல்லது தரையை துடைக்கும் போது சிறிதளவு உப்பை சேர்த்து துடைக்க வேண்டும். அவ்வாறு உப்பை சேர்த்து நீங்கள் வீட்டை துடைத்தால் ஈக்கள் வராது.

இன்று நாம் வாங்கி வரும் காய்கறிகளில் எண்ணற்ற கலப்படம் இருப்பதால் அதை சரி செய்து விடவும், மேலும் அதில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் போட்டு வைத்து அதன் பிறகு காய்கறிகளை நறுக்குவது மிகச்சிறந்ததாக இருக்கும்.

பால் காய்ச்சிய பாத்திரத்தில் அப்படியே பால் ஒட்டிக்கொண்டு இருக்கும். இதை கழுவுவதற்கு சிரமமாக இருக்கும். எனவே அந்த பால் பாத்திரத்தை கழுவுவதற்கு முன்பு குளிர்ந்த நீரை அந்த பாத்திரத்தில் ஒரு கால் மணி நேரம் விட்டு வையுங்கள். அதன் பிறகு பாத்திரத்தை தேய்த்து விடுங்கள். பால் பாத்திரமா  என்று எண்ணக்கூடிய அளவுக்கு பள பளப்பாக மின்னும்.

உங்கள் வீட்டு பாத்ரூமில் அதிக அளவு கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் இரவு உறங்குவதற்கு முன்பு நீங்கள் பிரீச்சிங் பவுடரை சிறிதளவு அப்படியே தூவி விட்டு செல்லுங்கள். கரப்பான் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

தேங்காய் மூடியில் உப்பை தடவி வைப்பது மூலம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

கோடை காலத்தில் உங்கள் வீட்டு ஜன்னல்களுக்கு கரும்பச்சை, கருநீளத்தில் ஆன திரை சேலைகளை பயன்படுத்தினால் வெயிலினால் ஏற்படக்கூடிய தாக்கமானது உள்ளே ஊடுருவி வராது.

எகிரி வரும் கேஸ் விலையை பார்த்து மலைக்கு இல்லத்தரசிகள் இனிமேல் உங்கள் வீட்டு கேஸ் மிச்சப்படுத்த சமைக்கும் பொருட்களை மூடி வைத்து சமைத்துப் பாருங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top