Connect with us

News

அந்த உறவு.. ஆனால்.. சுகம் கிடைக்கவில்லை.. விவாகரத்திற்கு காரணம் இது தான்.. மனம் திறந்த ஹரிப்பிரியா..!

By TamizhakamJuli 29, 2024 12:08 PM IST

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் தற்போது வெள்ளித்திரை நாயகிகளுக்கு ஈடான பிரபலத்தை பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் பக்குவமான நந்தினி கேரக்டரில் தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஹரிப்பிரியாவை பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹரிப்பிரியா தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டதோடு இவர் விவாகரத்து பெற காரணம் என்ன என்பதை அண்மை பேட்டியில் பேசி ரசிகர்களின் மத்தியில் ஷாக்கிங்கை ஏற்படுத்துகிறார்.

அந்த உறவு.. அந்த சுகம்..

எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை ஹரிப்பிரியா இசை சீரியல்களில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர்.

இந்நிலையில் இவர் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகராக விளங்கிய விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவரது மண வாழ்க்கை யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஒரு மகன் பிறந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து தனித்து வாழ்கிறார்கள்.

இந்நிலையில் இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்ன என்று இதுவரை தெரிந்து கொள்ளாத ரசிகர்களுக்கு அவர்கள் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை பற்றி அண்மையில் youtube சேனல் ஒன்றில் ஹரிப்ரியா பேட்டி அளித்திருக்கிறார்.

விவாகரத்துக்கு காரணம் இதுதான்..

இந்த பேட்டியில் விவாகரத்து பற்றி கூடும் போது கூறும் போது தனக்கு தற்போது தனிமை தான் சிறந்த நண்பனாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் தான் எப்போதும் தனியாக இருப்பதை தான் பெரிதும் விரும்புவதாகக் கூறி இருக்கும் இவர் ஒரு நாள் முழுவதும் தன்னை தனியாக விட்டாலும் அந்த நாளில் தனியாக பாட்டு கேட்டு புத்தகம் படித்து பொழுதைப் போக்குவேன் என சொல்லிவிட்டார்.

அத்தோடு அந்த தனிமையான நேரத்தில் தான் தன்னை பற்றி முழுவதும் உணர்வதாக சொல்லிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

மனம் திறந்த ஹரிப்பிரியா..

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் கசப்பான மனிதர்களை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். அது தான் அனைவருக்கும் மோசமான வாழ்க்கையாக இருக்கும். இதுவே பிடிக்காத உறவு என்று கூறலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் எப்படி குணசேகரன் கதிர் கதாபாத்திரம் உள்ளதோ அது போல உலகத்தில் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை தாண்டி தான் பெண்கள் வரவேண்டிய கட்டாயம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆரம்ப காலத்தில் காதலிக்கும் போது கிடைக்கும் அந்த சுகம் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும். ஆனால் அது தனக்கு நீடித்து கிடைக்கவில்லை என்று விவாகரத்துக்கான அழுத்தம் திருத்தமான காரணத்தை பகிர்ந்து விட்டார்.

மேலும் பெண்கள் ஆண்கள் சமம் என்று நான் இஷ்டத்துக்கு எதையும் செய்வேன் என ஏட்டிக்கு போட்டி செய்யாமல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பிடித்ததை செய்யக்கூடிய உரிமையை தான் சமமான உரிமையாக பார்க்கிறேன் என்று பேட்டியில் கூறியதை அடுத்து சூசகமாக அவரது விவாகரத்துக்கான காரணமாக இதைக் கூறியிருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top