Connect with us

News

படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தூங்கிய ரசிகர்..! – பீஸ்ட் கொடூரம்..!

By TamizhakamApril 13, 2022 4:25 PM IST

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ (Beast) திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார்  இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேநடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ் , யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ்  தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். படத்தைப் பார்த்தவர்களோ தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

காட்சிக்கு காட்சி எந்த சம்பந்தமும் இல்லாமல், வலுவான வில்லன் இல்லாமல் தடுமாறுகிறது பீஸ்ட்.

படம் கிளம்பிய இடத்திலயே நின்று விட கூடாது என்பதற்காக பணியிலேயே இல்லாத ஒருவர் இந்திய ராணுவத்தின் ரஃபேல் விமானத்தை எடுத்துக்கொண்டு பாகிஸ்தான் வரை சென்று தீவிர வாதிகளை பதற விடுகிறார்.

அதுவும் தீவிர வாதிகளின் கூடறத்திலேயே பார்க் செய்து விட்டு தீவிரவாத தலைவனை ஷாப்பிங் முடித்து விட்டு சரவணா ஸ்டோர்ஸ் கட்டை பையை தூக்கி வருவது போல வருவதெல்லாம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வேலை..

இந்த படத்தை ப்ரீ ப்ரமோஷன் செய்து டிக்கெட்டுகளை விற்று போட்ட பணத்தை எடுத்துடணும் என உஷாராகிய தயாரிப்பு தரப்பு ஒன்றுக்கு ஐந்து மொழிகளில் டப் செய்து வெளியிட்டு தலையை காப்பாறிக்கொண்டுள்ளது.

இந்நிலையில், படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே கவுந்தடித்து தூங்கிய ரசிகரின் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top