Connect with us

News

“ஒரிஜினல் நாட்டுகட்ட.. மாம்பழ கலரு..” – இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த கௌரி கிஷன்..! – வைரல் பிக்ஸ்..!

By TamizhakamAugust 28, 2022 3:53 PM IST

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் நடித்த திரைப்படம் “96” இந்த திரைப்படத்தில் இளம் வயது திரிஷா தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கௌரி கிஷன்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் பலரும் இவரை குட்டி ஜானு என்று நினைவில் கொண்டனர். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக சில காட்சிகளில் நடித்திருந்தார். படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இருந்ததால் இவருக்கு இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை கௌரி கிஷன் சமீபத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் புரிதலை கொண்டாடும் ஆல்பம் பாடல் ஒன்றிலும் நடித்து இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்பொழுது பழுத்த மாம்பழம் போல இருக்கும் தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் சிலை அழகு ஒரிஜினல் நாட்டுக்கட்டை என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். மஞ்சள் நிற ஒளியை தன்னுடைய முகத்தில் படர விட்டு பளபளவென இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top