Connect with us

News

ஆண்ட்டி.. குண்டு.. என்று கலாய்த்த ரசிகர்கள்.. – சீரியல் நடிகை ஹரிப்ரியா கொடுத்த தரமான பதிலடி..!

By TamizhakamAugust 28, 2022 9:41 AM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் அப்பாவி மருமகளாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹரிப்ரியா. இதற்கு முன்பு பிரியமானவளே, கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கின்றார்.

அப்படி நடித்துக்கொண்டிருக்கும் போது சக சீரியல் நடிகர் விக்னேஷ் என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.

தொகுப்பாளினி, நடிகை என பன்முகத் திறமை கொண்ட இவர் சீரியலில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஒரு நடிகையாக இருக்கின்றார். இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

சீரியலில் எப்பொழுதுமே புடவை சத்தமாகவே தோன்றும் ஹரிப்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளில் தோன்றுவதும் வாடிக்கைதான். தற்போது உடல் எடை கூடி சற்றே குண்டாக இருக்கும் இவரை ஆன்ட்டி என்று கமென்ட் செய்த சில ரசிகர்களின் கருத்துக்கு ஹரிப்ரியா தனது கருத்தை கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, ஆண்டியாக இருந்தால் என்ன..? ஒவ்வொருவருக்கும் வயதாவது இயற்கை..! வயது ஏறிக் கொண்டே போவதை எப்படி ஒரு தவறான விஷயமாக பார்க்கமுடியும்..! எல்லோருக்கும் வயதாகத்தான் போகின்றது. வயதாகிக் கொண்டு தான் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார் ஹரிப்பிரியா.

மேலும், சமீபத்தில் எனது காலில் அடிபட்டு விட்டது. இதனால் வழக்கம் போல என்னால் உடற்பயிற்சிகளை செய்ய முடியவில்லை. இங்கே சிகப்பாக இருக்கிறார்கள், அழகாக இருக்கிறார்கள், கருப்பாக இருக்கிறார்கள், குண்டாக இருக்கிறார்கள் என்று அவர்களை உடல் ரீதியாக கிண்டல் செய்யும் போக்கு இருக்கிறது.

ஆனால், அது தவறு எல்லாமே அழகுதான். ஒவ்வொருக்கும் ஒவ்வொன்று அழகு என்று தன்னுடைய அனுபவ பூர்வமான பதிலை கொடுத்திருக்கிறார் இவருடைய இந்த பதில் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top