காரைக்குடியில் பிள்ளையார்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் கற்பக விநாயகரை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரிந்திருக்கும். இந்த திருக்கோயிலில் மூலவராக கற்பக விநாயகர் இருக்கிறார். மேலும் இந்தக் கோயிலில் இவருக்கு தல விருட்சமாக மருதமரம் உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய இந்தக் கோயில் எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டது. 1600 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒரு குடைவரை கோயிலாக இந்த கோயில் திகழ்கிறது. மேலும் இக்கோவிலானது மகேந்திர பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் அர்ஜுனன் வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. அதில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிற திருப்புடைமருதூர் என்பது மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவிடைமருதூர் என்பது இன்னொன்று ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஶ்ரீசைலம் என்பது கடைசியாக நான்காவதாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பாகும்.
இந்த கோயிலுக்கு வருபவர்களுக்கு திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்குதல் போன்றவை வேண்டுதல்களாக வைக்கப்பட்டு நிறைவேறி வருகிறது.
பிள்ளையார் சதுர்த்தி அன்று ராட்சத கொழுக்கட்டை ஆண்டுதோறும் உண்டாக்கப்பட்டு இங்கு இருக்கக்கூடிய விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக உள்ளது.
மேலும் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமாள் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருக்கோயிலானது காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் மாலை நேரத்தில் நான்கு மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இந்தக் கோயில் விநாயகப் பெருமானுக்கு தேர் திருவிழா நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இங்கு பிள்ளையாருக்கு என ஒரு தேரும் சண்டிகேஸ்வதற்கும் ஒரு தேர் என இரண்டு தேர்தல் இழுக்கப்படும் பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றைப் பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வது சிறப்பானதாகும். சண்டிகேஸ்வரர் தேரை பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள்.
பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கு முன்பு காப்புக் கட்டி கொடியேற்றத்தோடு விழா துவங்கும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவம் ராட்சச கொலுக்கட்டை நெய்வேத்தியம், தங்க வெள்ளி வாகனங்களில் கடவுளின் உலா இருக்கும். இதை எண்ணற்ற பக்தர்கள் தரிசனம் செய்து பிள்ளையாரின் அருளைப் பெறுவார்கள்.
Loading ...
- See Poll Result