அறுபது, எழுபதுகளில் அனைவரும் விரும்பி தின்ன ஒரு அற்புதமான பண்டம்தான் கமர்கட் இந்த பண்டத்தை உண்பதன் மூலம் பற்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் இந்த மிட்டாய் பற்களில் ஒட்டாத தன்மையுடன் இருக்கும். நீண்டநேரம் சுவைத்தும் ரசித்தும் சப்பி உண்ணலாம்.
அதே போல தேன்மிட்டாய்,கயிறு மிட்டாய், எள்ளுரண்டை, கடலை மிட்டாய், கொக்கொ மிட்டாய், மாங்காய் போன்றவற்றை காக்கா கடி கடித்து அதை பலரோடு பகிர்ந்து உண்பதே அலாதியான சுகம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
அப்படிப்பட்ட அருமையான கமர்கட்டினை எப்படி செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
தேவையானவை:
தேங்காய் துருவல் – 2 கப்
பாகு வெல்லம் – ஒன்றரை கப்
நெய் – சிறிதளவு.
செய்முறை:
வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி, தேங்காய் துருவல் சேர்த்து, அடுப்பை ‹சிம்’ மில் வைத்து 20 நிமிடம் நன்கு கிளறவும் (இதில் கொஞ்சம் எடுத்து சற்று ஆறவிட்டு, உருட்டிப் பார்க் கும்போது உருட்ட வந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்). கலவை சற்று சூடாக இருக்கும்போதே, கையில் நெய்யை தொட்டு சின்னச் சின்ன உருண்டை களாகப் பிடிக்க… கமகம கமர்கட் தயார்.
இந்த கமர்கட்டு உங்களுக்கு சாப்டாக தேவைப்பட்டால், கம்பி பதம் வந்த உடனேயே தேங்காயை போட்டு விடலாம்.
கொஞ்சம் சாப்டான கமரகட்டு கிடைக்கும். இதை அகலமான தட்டில் ஊற்றி வெட்டி தேங்காய் பர்ஃபி போலவும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
அது உங்களுடைய இஷ்டம்தான். கமர்கட்டு செய்ய வெல்லம் வாங்கும்போது, பாகு வெல்லம் என்று கடையில் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
Loading ...
- See Poll Result