Connect with us

என்ன பேக் இது.. ஹுமா குரேஷி வெளியிட்ட புகைப்படம்.. பதறிய ரசிகர்கள்..!

என்ன பேக் இது.. ஹுமா குரேஷி வெளியிட்ட புகைப்படம்.. பதறிய ரசிகர்கள்..!

டெல்லியை சேர்ந்த பிரபல நடிகைகளின் முக்கியமான ஒரு நடிகையாக ஹுமா சலீம் குரேஷி இருக்கிறார். ஹுமா சலீம் குரேஷி மாடலிங் துறை மூலமாக சினிமாவிற்கு வந்தவராவார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையின் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது.

அதனை தொடர்ந்து அவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் பெரும்பாலும் மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த விளம்பரங்களில் நன்றாக நடிப்பதன் மூலம் பலரது கவனத்தையும் அவர்கள் பெற முடியும்.

அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பும் கிடைக்கும். இந்த நிலையில் யுனிலிவர் நிறுவனத்திற்காக விளம்பரம் ஒன்றில் நடித்து அது அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து சாம்சங் மொபைல் நிறுவனத்திற்கும் விளம்பரத்தில் நடித்து கொடுப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஹுமா குரேஷி.

ஹிந்தியில் வாய்ப்பு:

இந்த நிலையில்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது . கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் என்கிற பிரபல ஹிந்தி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படம் அப்போதைய சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக இருந்தது.

அந்த சமயத்தில்தான் ஹிந்தியில் கேங்ஸ்டர் திரைப்படங்கள் அதிகமாக வரத் துவங்கி இருந்தன. அந்த படம் இரண்டு பாகமாக வெளியானது. அதற்கு பிறகு ஹுமா குரேஷி நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார். அவர் நடித்த படங்களில் ஹை வே மாதிரியான திரைப்படங்கள் பிரபலமான படங்களாகும்.

தமிழில் முதன் முதலில் காலா திரைப்படத்தில் சரினா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். காலா கதாபாத்திரத்தின் முன்னாள் காதலியாக வரும் அந்த கதாபாத்திரம் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது.

தமிழில் பிரபலம்:

அதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. பெரும்பாலும் பல படங்கள் நடித்து கூட நடிகைகளுக்கு கிடைக்காத வரவேற்பு காலா என்கிற ஒரு திரைப்படத்திலேயே அவருக்கு கிடைத்தது. அதற்கு பிறகு மீண்டும் தமிழில் அவருக்கு வலிமை திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

வலிமை திரைப்படத்தில் கிட்டத்தட்ட அஜித்துடன் சேர்ந்து பணிபுரியும் பெரிய கதாபாத்திரத்தில் நடித்தார். பாலிவுட்டில் ஏற்கனவே ஒரு பெரிய நடிகை என்பதால் தமிழில் இவருக்கு பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் எல்லாம் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

அதற்கு பிறகு தமிழில் பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் தொடர்ந்து இப்பொழுதும் ஹிந்தியில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கவர்ச்சியாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகிறது. வயது அதிகமாக இருந்தாலும் கூட புகைபடத்தில் அது வயது தெரியாத அளவிற்கு கவர்ச்சியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் இதற்கு லைக் தெரிவித்து வருகின்றனர்.

More in News

ads
To Top