Connect with us

என் தாய்ப்பாலை பிடித்து இதை செய்தேன்.. அதுவும் படப்பிடிப்பு தளத்தில்.. காஜல் அகர்வால் சொன்னதை கேட்டீங்களா..?

என் தாய்ப்பாலை பிடித்து இதை செய்தேன்.. அதுவும் படப்பிடிப்பு தளத்தில்.. காஜல் அகர்வால் சொன்னதை கேட்டீங்களா..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். மும்பை மகாராஷ்டிரா பகுதியில் பிறந்து வளர்ந்தவரான இவர் முதன்முதலில் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் .

2004 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த ஹேக் காயா நாகா என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாத்துறைக்கு நடிகையாக அறிமுகமானார்.

நடிகை காஜல் அகர்வால்:

அதை எடுத்து தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய காஜல் அகர்வால் முதன்முதலில் 2007 இல் வெளிவந்த லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமாகி இருந்தார்.

அதுவரை இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்ற முடிவில் இருந்த காஜல் அகர்வாலுக்கு 2001ம் ஆண்டு கடைசியாக நடித்துவிட்டு பார்க்கலாம் என மகதீரா திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை குறித்து புரிந்தது. அதை எடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது .

வெற்றி படங்கள்:

குறிப்பாக மகதீரா திரைப்படத்தில் சிறந்த நடிப்பு வெளிப்படுத்தி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து பிருந்தாவனம் ,பிசினஸ் மேன் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கு சினிமாவின் திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக அங்கு இடத்தை பிடித்தார் காஜல் அகர்வால்.

அதை எடுத்து தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜில்லா திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை இங்கும் படைத்தார்.

நான் மகான் திரைப்படம் காஜல் அகர்வாலுக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த மாற்றான் , துப்பாக்கி, ஆல் இன் அழகு ராஜா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெசர்ல் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் இருந்தபோது கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.

இவருக்கு நீல் என்ற ஒரு அழகிய மகன் இருக்கிறார். குடும்பம் குழந்தைக்கு பிறகும் தொடர்ந்து காசி அகர்வால் திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வத்தை செலுத்து வருகிறார் .

தாய்ப்பால் பிடித்து இதை செய்தேன்…

இந்த நிலையில் குழந்தை பெற்ற பிறகு. திரைப்படங்களில் நடிக்கும் சிரமத்தை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசினார்.

குழந்தை பிறப்பிற்கு பிறகு நான் ஷூட்டிங் செல்லும்போது என்னுடைய மகனையும் அழைத்து செல்வேன் அப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து சற்று தூரமாக கேரவன் நின்று கொண்டிருக்கும்.

என் குழந்தைக்காக நான் தாய்ப்பால் கறந்து என்னுடைய டிரைவரிடம் கொடுத்து அனுப்புவேன்.

இப்படியாக ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என்னுடைய டிரைவர் என்னுடைய தாய்ப்பாலை கொண்டு போய் என்னுடைய குழந்தைக்கு கொடுத்துவிட்டு வருவார்.

இப்படித்தான் நான் ஷூட்டிங்கில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நடித்து வந்தேன். தாய்ப்பால் குழந்தைகளுக்கு அவ்வளவு அவசியம் என காஜல் அகர்வால் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

More in News

ads
To Top