Connect with us

News

இந்த நடிகருடன் அதை பகிர்ந்து கொண்டு ரொமான்ஸ் பண்ண ஆசை.. கூச்சமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்..!

By TamizhakamAugust 6, 2024 7:32 AM IST

செய்தி வாசிப்பாளினியாக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

செய்தி வாசிப்பாளினியாக பிரியா பவானி ஷங்கர்:

கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் பிரியா பவானி சங்கர் .

இந்த தொடர் அவருக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. குறிப்பாக இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டார்.

அதை அடுத்து திரைப்படத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வந்தது. முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த «மேயாத மான்» என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கேரக்டரில் நடித்தார் பிரியா பவானி சங்கர்.

தொடர் வெற்றி திரைப்படங்கள்:

அந்த முதல் படமே நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதை அடுத்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை திரைப்படங்களில் தொடர்ச்சியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார் .

நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை கல்லூரி காலத்தில் படிக்கும்போது இருந்தே காதலித்து வருகிறார்.

அவ்வப்போது தனது காதலனுடன் வெளிநாடுகளுக்காக அவுட்டிங் செல்வது, ஜோடியாக எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருந்து வருகிறார்.

மேலும் தனது காதலுடன் சேர்ந்து கடற்கரையில் அருகே உள்ள மிகப்பெரிய பங்களா வீட்டை ஒன்றை வாங்கி அதில் குடிப்பெயர்ந்து இருந்தார் .

அவருடன் அதை பகிர்ந்துக்கொள்ள ஆசை:

பிரியா பவானி சங்கர் விரைவில் தனது காதலனுடன் திருமணம் செய்ய போவதாக கூட செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது உச்ச நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயம் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அவர் கூறியதாவது, நீங்கள் திரைப்படத்தில் எந்த நடிகருடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள? என கேட்டதற்கு… நான் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய ரசிகை.

எனவே நான் அவருடன் திரையை பகிர்ந்து கொண்டு மிகவும் அழகான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் என உஷாராக பதில் கூறி எஸ்கேப் ஆகினார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top