Connect with us

News

“Delivery-க்கு அப்புறம் நான் 100 தடவ…” – எதிர்நீச்சல் ஜான்சி ராணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

By TamizhakamMärz 22, 2023 9:18 PM IST

எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஜான்சிராணி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். இவர் ஏற்கனவே திருநங்கைகள் பற்றி டாக்டரேட் செய்திருக்கிறார்.

மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு வயது 60 தாண்டி விட்டதாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி  வரும் எதிர்நீச்சல் சீரியலில் சமீபத்தில் அறிமுகமான ஜான்சிராணி என்ற கதாபாத்திரத்தை யாரும் எளிதாக மறந்துவிட முடியாது. இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு காரணமாக இருக்கக்கூடிய இந்த கதாபாத்திரத்தில் நடிகர் குணசேகரனுக்கு போட்டியாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் ஜான்சிராணி.

இவருடைய உண்மையான பெயர் காயத்ரி கிருஷ்ணன் என்பதாகும். சமீபத்தில் வெளியான அயலி என்ற வெப் சீரியஸில் மைதிலி என் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு பல்வேறு படிப்புகளில் ஆர்வம் இருந்த இவர் திருநங்கைகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு பிஎச்டி பட்டமும் பெற்றிருக்கிறார்.

திருநங்கைகளின் வலியை புரிந்து கொள்ள இந்த படிப்பால்தான் முடிந்தது என பதிவு செய்திருந்தார் காயத்ரி கிருஷ்ணன். சமீபத்திய ஊடகம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் சீரியலில் மட்டும் தான் வெற்றிலை போடுவீர்களா..? அல்லது, நிஜத்திலும் வெற்றிலை போடும் பழக்கம் இருக்கிறதா..? என்ற கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.

அவர் கூறியதாவது நிஜத்திலும் வெற்றிலை போடுவேன். அதிலும் குறிப்பாக குழந்தை பிரசவமான பிறகு ஒரு நாளைக்கு 100 தடவை கூட வெற்றிலை போட்டு இருக்கிறேன்.

குறிப்பாக காலையில் காபி சாப்பிடுவதற்கு முன்பு காபி சாப்பிட்ட பின்பு காலையில் டிபன் சாப்பிடுவதற்கு முன்பு டிபன் சாப்பிட்ட பின்பு அதன் பிறகு மதியம் சாப்பிடும் முன்பு சாப்பிட்ட பின்பு இரவு சாப்பிடும் முன்பு சாப்பிட்ட பின்பு என எதை கொடுக்கிறாரோ இல்லையோ என் அம்மா வெற்றிலையை கொடுத்து விடுவார்.

இது செரிமானத்துக்கு உகந்தது என்பதால் கொடுப்பார். அதனால் நிஜ வாழ்க்கையிலும் வெற்றிலை போடும் பழக்கம் எனக்கு இருக்கிறது என பதிவு செய்திருந்தார் இவருடைய இந்த பேட்டி சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top