Connect with us

News

“தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடியவர்..” – ஆளும் கட்சி பிரமுகரை விளாசிய நடிகை கஸ்தூரி..!

By TamizhakamFebruary 17, 2022 1:57 AM IST

நடிகை கஸ்தூரி சங்கர் ( Kasthuri ), குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர்.தற்போது சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.

நடிகை கஸ்தூரி, ஆத்தா உன் கோயிலிலே படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய மொழிப்படங்களில் மட்டுமின்றி இந்தியிலும் நடித்துள்ளார்.இடையில் சில காலங்கள் நடிக்காமல் இருந்த இவர் கடந்த 2009ல் வெளியான அருண் விஜய்யின் மலை மலை படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து நடித்து வரும் இவர், சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

RSS vs ஈ.வெ.ராமசாமி

பொதுவாகவே சமூக வலைதளங்களில் சங்க பரிவாரங்களை சேர்ந்தவர்களுக்கும் ஈ.வெ.ராமசாமியை பின்பற்றுபவர்களுக்கும் இடையே கருத்து மோதல் நடந்து கொண்டு தான் இருக்கும்.

அதே போல ஒரு சம்பவத்தில் நடிகை கஸ்தூரி தன்னை இணைத்து கொண்டு ஆளும் கட்சி செய்தி தொடர்பாளரான சரவணன் என்பவருக்கு கடுமையான பதிலை கொடுத்துள்ளார்.

இது, இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, வாரிசு அரசியல் என கூக்குரலிடும் எவரும், ஆர்.எஸ்.எஸ். தலைவராக பிராமணர் அல்லாதோர் வரமுடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முன்வருவதில்லை என்று வழக்கமாக பிராமணர்களை வம்பு இழுக்கும் விதமாக திமுகவை சேர்ந்த சரவணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.

தள்ளாத வயதில் திருமணம் செய்த ஈ.வெ.ராமசாமி

இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, எப்போதெல்லாம் திமுகவுக்கு பிரச்சனை ஏற்படுகிறதோ.. அப்போதெல்லாம் பிராமண துவேஷத்தை ஆரம்பித்து விடுகிறார்கள்.தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடியவர் வழிவந்தவர்கள் பேசலாமா மற்ற இயக்கங்களை பற்றி . ராஜாஜி தொடங்கி மமதா , ராகுல், பிரசாந்த் கிஷோர் வரை பிராமணர் கூட்டு இல்லாமல் அரசியலே இல்லையே திமுகவிற்கு , அதை பேசுவீர்களா? என்று காட்டமான பதிலை கொடுத்துள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top