K.G.F படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கன்னட திரையுலகின் பிரம்மாண்டமான கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி ஓட்டுமொத்த திரையுலகையும் வாய் பிளக்க வைத்தது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

 

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கேஜிஎப் சாப்டர் 2 எடுக்கப்பட்டது. 

 

ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் சமீபத்தில் இத்திரைப்படம் ஜூலை 16ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

 

இந்திய சினிமாவில் மிகச்சிறிய வியாபார எல்லையை கொண்டிருந்த கன்னட சினிமாவை மிகப் பெரிய மார்க்கெட்டுக்குள் கொண்டு சென்ற பெருமை கே ஜி எஃப் படத்துக்கு உண்டு. 

 

 

கே ஜி எஃப் படம் வெளியாகும் போது அந்த படத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை. படம் வெளியான பிறகு கிடைத்த விமர்சனங்களால் அந்த படம் மாபெரும் வசூலை குவித்தது. 

 

அதனைத் தொடர்ந்து தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கு அப்படியே நேர் எதிர்மாறாக எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. 

 

அதற்கு எடுத்துக்காட்டாக கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் தற்போது வரை 173 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது தான். இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு சீக்ரெட் ஒன்றை உடைத்துள்ளார். 

 

கேஜிஎஃப் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஷை மனதில் வைத்துதான் எழுதினாராம். ஆனால் பாகுபலி வெற்றியால் பிரபாஸ் உச்சத்தில் இருந்த நிலையில் அவரிடம் கதை சொல்ல முடியவில்லையாம். 

 

அதனைத் தொடர்ந்து அந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் நடிக்கிறேன் என கூறி நடித்துக் கொடுத்தாராம் யாஷ். தற்போது இந்த தகவலை பிரசாந்த் நீல் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபன் ஆக தெரிவித்துள்ளார். 

 

ஒருவேளை பிரபாஸ் கேஜிஎப் படத்தில் நடித்திருந்தால் பாகுபலி அளவுக்கு கே ஜி எஃப் படம் பேசப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave comment

Tamizhakam