திவ்யா பாரதி,(Divya Bharathi) தமிழ் சினிமாவில், ரசிகர்களிடம் அறிமுகமான ஒரு நடிகை தான். கடந்த 2021ம் ஆண்டில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தில், திவ்யா பாரதி நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வக்குமார் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடித்திருந்தார். முனீஸ்காந்த், பகவதி பெருமாள், சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த 1992ம் ஆண்டில் பிறந்த திவ்யா பாரதி, கோவையை சேர்ந்தவர். பேச்சுலர் படத்தில் நடிக்கும் முன்பே, மதில் மேல் காதல் என்ற படத்தில் இவர் நடித்திருக்கிறார். இப்போது, தமிழில் பட வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறார்.
Divya Bharathiஇப்போது எல்லாம் ஓரிரு படங்களில் முகம் காட்டி விட்டாலே, அவர்களுக்கு நடிகை என்ற அங்கீகாரமும், சமுதாய மரியாதையும் கிடைத்து விடுகிறது. குறிப்பாக மீடியாக்களும், சமூக வலைதளங்களும் அவர்களை தலைக்கு மேல் வைத்து கொண்டாட துவங்கி விடுகின்றன.
அவர்களை பற்றிய தகவல்களை பதிவிட்டு, மேலும் மேலும் அவர்களை பற்றி அறிவதற்கான சுவாரசிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன. நடிகை திவ்யாபாரதி, சமூக வலைதள பக்கங்களில் மிக ஆர்வமாக இருக்கிறார். அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அதற்கு லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகிறது.
Divya Bharathiசமீபத்தில், ஒரு நேர்காணலில் பேசிய திவ்யாபாரதி வெளிப்படையாக சில விீஷயங்களை, ரசிகர்களுக்காக பகிர்ந்து இருக்கிறார். அதன்படி, காபி சாப்பிட, டின்னர் சாப்பிட அழைப்பது போல, சிலர், டேட்டிங் செய்ய அழைக்கின்றனர், அதற்கு கேள்வியாளர், உங்களுக்கு கிடைத்த முதல் முத்தம் குறித்து நினைவிருக்கிறதா? என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த திவ்யாபாரதி, நன்றாக நினைவிருக்கிறது.
Divya Bharathiகல்லூரியில் படித்த போது ஒரு பையன் என்னை முத்தமிட்டான். ஆனால், அதற்கு பிறகு அவனுடன் எனது பழக்கம் இப்போது இல்லை. போனில் கூட இருவரும் பேசிக்கொள்வது இல்லை. அவனுக்கு திருமணமும் ஆகி விட்டது, என்கிறார்.
காதலனை இழந்துவிட்ட வருத்தம் இருக்கிறதா, என்ற கேள்விக்கு, வேண்டாம் என்று விட்டுவிட்டு சென்ற பசங்க, அப்படி எல்லாம் பீல் பண்ணுவாங்களா? எனவும் திருப்பிக் கேட்கிறார்.
Divya Bharathiகல்லூரியில் படிக்கும் போதே முத்தங்களை பரிமாறிக்கொண்டேன். என்னுடைய காதலனுடன் தான் அது நடந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் ப்ரேக்-அப் ஆகிவிட்டது என்று திவ்யா பாரதி இப்படி வெளிப்படையா5க கூறி இருப்பது, வைரலாகி வருகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Loading ...
- See Poll Result