சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி என்ற சூப்பர் ஹிட்டான சீரியலில் அறிமுகமான நடிகை கிருத்திகா பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இந்த சீரியலில் இவரது பாங்கான நடிப்பால் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.
சின்னத்திரை சீரியல் நாயகியான கிருத்திகா பெரும்பாலும் வில்லி கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மூத்த மருமகள் கேரக்டர் ரோலை மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மிகச்சிறந்த நடன கலைஞரான இவர் நடனத்தின் மீது கொண்ட காதலால் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அனைவரையும் அசத்தியிருக்கிறார். இந்த நடன நிகழ்ச்சியில் பங்கு பெறும் போது தான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
ஆனால் இவரது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து பெற்று தனித்து தான் வாழ்ந்து வருகிறார். எனினும் விவாகரத்து செய்வதற்கு முன்பு பலவிதமான மன குழப்பங்களில் இவர் இருந்திருக்கிறார்.
மேலும் அண்மையில் இவர் ஒரு பேட்டியில் பேசும்போது திருமணம் ஆன நாளில் இருந்தே இவர்கள் மத்தியில் பிரச்சனைகள் பல எழுந்துள்ளது. அவற்றையெல்லாம் பேசித்தான் நாங்கள் சமாளித்தோம். எனினும் முடியாத காலகட்டத்தில் தான் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் இவருக்கு ஒரு மகன் இருப்பதால் இவனிடம் யாராவது தந்தையை பற்றி கேட்டால் மனம் கஷ்டப்படும் என்று தான் இத்தனை நாட்களும் பொறுத்திருந்ததாக கூறிய இவர் தற்போது அது பற்றி கவலை இல்லை என்றார்.
ஏனென்றால் இவரது அண்ணன் இவனுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தி வருகிறார். எனவே தற்போது அது பற்றிய எந்த கவலையும் எனக்கு இல்லை. மேலும் என்னுடைய அண்ணனுக்கு என் மகனை தத்து கொடுத்து இருக்கிறேன் என கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
இன்று உலகில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன என்று பல ஆய்வுகள் நடந்து கொண்டு வருகிறது. குறிப்பாக திரை உலகில் நடிக்கும் கலைஞர்களில் விவாகரத்துக்கள் மிக எளிமையாக நடந்து விடுவதற்கு இவரது விவாகரத்தையும் எடுத்துக்காட்டாக சொல்ல முடியும்.