Connect with us

News

அந்த இடத்தில் அடித்து.. அதை ஓப்பனா சொல்ல முடியாது.. கிருத்திகா அண்ணாமலை வேதனை..!

By TamizhakamJanuar 25, 2024 11:21 AM IST

சின்னத்திரையில் வெள்ளி திரைக்கு நிகராக கெத்துக்காட்ட கூடிய நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவராக கிருத்திகா அண்ணாமலையை சொல்லலாம்.
வேறுபட்ட தனது நடிப்பின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து இருக்கும் இவர் தமிழக இல்லங்களில் ஒரு பெண்ணாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அந்த இடத்தில் அடித்து..

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலியில் அற்புதமான கேரக்டர் ரோலை செய்தவர் தான் கிருத்திகா அண்ணாமலை. ஆள் பார்க்க படு ஜோராக நல்ல உயரமாக இருப்பார்.

இவரது உயரத்திற்கு ஏற்றபடி தற்போது வில்லத்தனமான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து சின்னத்திரையை மிரட்டி வருகிறார் என்று சொல்லக்கூடிய அளவு வில்லி கேரக்டர்களை சிறப்பாக செய்து வருகிறார்.

வில்லியாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் பட்டையை கிளப்பும் கிருத்திகா அண்ணாமலை இணையதளத்திலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

மெட்டி ஒலியை அடுத்து இவரது நடிப்பில் வெளி வந்த முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் தனது அற்புத நடிப்புத்திறனை நிரூபித்திருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

சீரியர்களில் கலக்கி வரக்கூடிய இவரது மண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு பல சிக்கல்களை சந்தித்து வரக்கூடிய இவர் தன் கணவன் மூலம் பட்ட துன்பத்திற்கு எல்லை இல்லை என்று கூறக்கூடிய அளவு சோகம் நிறைந்தது.

தினமும் இவரை அந்த இடத்தில் அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் எதற்காக இப்படி வாழ வேண்டும் என்று அவர் எண்ணி இருக்கிறார்.

பொறுமை இழந்து விட்டேன்..

பொதுவாகவே கணவன் மனைவி இருவருடைய அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவது இயல்புதான். எனினும் அது ஒரு கட்டத்தில் அப்படியே சரியாகிவிடும். எனினும் இவர்கள் பிரச்சனையில் அப்படி இல்லை.

பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கக்கூடிய சமயத்தில் எல்லாம் என்னை அடிக்க கூடாத இடத்தில் எல்லாம் அடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை கிருத்திகா அண்ணாமலை வைத்திருக்கிறார்.

இந்த காரணத்தால் தவறான முடிவு எடுக்கும் நிலைக்கு சென்று இருக்கக்கூடிய அவர் சில விஷயங்களை ஓபன் ஆக சொல்ல முடியவில்லை. அப்படி சொல்லவும் கூடாது என தெரிவித்திருப்பது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இவர் கட்டிக்கொண்ட கணவர் திருமணத்திற்கு வரன் தேடும் வலைதளத்தின் மூலமாக தேடிப்பிடித்து வந்தவர் தான். என் மீது எந்த தவறும் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்.பொதுவாகவே ஒருவர் திட்டும் போது அவரை எதிர்த்து கோபத்தில் நாலு வார்த்தை அதிகமாக பேசுவது இயல்பான ஒன்று தான் அதைத்தான் நானும் செய்தேன்.

எனினும் ஒரு கட்டத்தில் அவர் இயல்பினை மாறி என்னுடைய தாயைப் பற்றி கண்டபடி பேச ஆரம்பித்தார். அவருடைய வளர்ப்பு சரியில்லை. உன்னை அம்மா சரியாக பார்க்கவில்லை என்றெல்லாம் வரம்பு மீறி பேசினார்.

இப்படி தொடர்ந்து பிரச்சனைகள் பூதாகரமாக தொடர்ந்து வந்ததை அடுத்து பொறுமை இழந்து விட்டேன்.  மன வேதனையில் தவிர்த்த நான் ஒரு கட்டத்தில் பிரிந்து விடலாம் என்று முடிவினை செய்து கணவரை விவாகரத்து செய்து விட்டேன் என கிருத்திகா அண்ணாமலை கூறியிருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top