Connect with us

News

லண்டனில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகை குஷ்பு..! – என்ன காரணம் தெரியுமா..?

By TamizhakamSeptember 6, 2022 6:56 PM IST

கொழு கொழு, மொழு மொழு என்று இருந்த குஷ்பு தற்போது ஸ்லிம்மாகி ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.அத்தோடு நிறுத்திவிடாமல் மேலும் ஏதோ ஒரு சந்தோஷ விஷயத்தை நமக்கு தெரிவிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பதினால் என்னவோ அவர் முகம் பிரகாசமாக சந்தோஷமாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

வெற்றி படங்களை கொடுத்த சுந்தர் சி யை குஷ்பூ திருமணம் செய்து கொண்ட பின் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் குஷ்பூ திரைப்படங்கள் மட்டுமல்லாமல்  திரையில் நடித்ததோடு சில குறும்படங்களையும் இயக்கி வந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

 இவரும் ராதிகாவை போல சீரியல்களை இயக்குவதில் மிகவும் ஆர்வத்தோடு இருந்ததோடு படங்களை டைரக்ட் செய்யவும் விரும்பி அதற்கான முயற்சிகளையும் செய்தவர்.

குஷ்பு உள்நாட்டில் மட்டுமல்லாமல் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வந்திருந்தார். அதிலும் குறிப்பாக லண்டனுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் ஏன் லண்டனுக்கு அடிக்கடி செல்கிறார் என்ற கேள்வி பலர் மத்தியில் இருந்தது.

இந்த கேள்விக்கு உரிய உண்மையான பதில் தற்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது. அது மிகவும் சந்தோஷமான விஷயம்தான். அந்த விஷயம் வேறு ஒன்றுமில்லை. குஷ்பூ ஒரு சொந்தமாக ஒரு புதிய வீட்டை லண்டனில் விலைக்கி வாங்கியிருக்கிறார்.

இப்போது அந்த புதிய வீட்டிலிருந்து கொண்டவரே சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது சமூக வலைத்தளத்தில் என்பதால் அனைவரும் மிகவும் ஆசையுடன் பார்த்தார்கள். அதோடு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது எல்லோருக்கும் புரிந்து விட்டது.

புது வீட்டில் பால் காய்ச்சி அந்தப் பாலில் டீ போட்டு குடிப்பது போன்ற போட்டோக்களை வெளியிட்டு   செய்து உள்ளதால் அனைவரும் ஆச்சரியத்தில் அசந்து உள்ளார்கள். இனி குஷ்பூ தமிழ்நாட்டுப் பக்கம் தலை காட்டுவரா அல்லது ஐரோப்பிய நாட்டிலேயே இருந்து விடுவாரா..? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள்  வைக்கிறார்கள். அவர் தனது மகள் தங்கிப்படிப்பதற்காக இங்கு வீட்டை  வாங்கி அதில் மகளோடு தங்கி இருப்பதாக பதில் கூறியிருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top