Connect with us

News

இந்த வயசுல பண்ற வேலையா இது..? குஷ்பூவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

By TamizhakamApril 2, 2024 10:49 AM IST

எப்போதுமே தமிழக ரசிகர்களுக்கு மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நடிகைகளை திரையில் பார்த்தால் குஷி ஆகிவிடுவார்கள். அந்த வகையில் 1980-களில் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் அறிமுகமான நடிகை குஷ்பூ தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

குஷ்புவின் மீது கொண்டிருந்த தீவிர காதலால் ரசிகர்கள் பலரும் எந்த நடிகைக்கு செய்யாத விஷயத்தை செய்தார்கள். அது.தான் நடிகை குஷ்புவுக்கு ரசிகர்களால் கட்டப்பட்ட கோயில். அந்த அளவு குஷ்புவின் தீவிர வெறியராக திகழ்ந்தார்கள்.

நடிகை குஷ்பூ..

தமிழ் திரை உலகில் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: முக்கிய புள்ளியால் கருக்கலைப்பு வரை சென்ற மல்லி நகர நடிகை.. ஆதாரத்துடன் சிக்கிய கூத்து..

சின்னத்தம்பி படத்தில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு பல விருதுகள் வந்து சேர்ந்தது. அத்தோடு நடிகர் இளைய திலகம் பிரபுவோடு அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றதை அடுத்து இருவருக்கும் இடையே காதல் கல்யாணம் என கிசுகிசுக்கள் வெகுவாக பரவியது.

இதனை அடுத்து இந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் தமிழ் திரைப்பட இயக்குனரான சுந்தர் சி யை மணந்து தற்போது இரண்டு பெண்களுக்கு தாயாக இருக்கும் இவர் ஒரு பன்முக திறமையை கொண்டவர்.

அவ்னி சினிமாஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கக் கூடிய இவர் சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். திரைப்படங்கள் இன் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கலை கட்டிய நடிகை குஷ்பூ ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்திருக்கிறார்.

அத்தோடு அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்திருக்கும் அரண்மனை 4 திரைப்படம் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்துள்ளது.

இந்த வயசுல பண்ணற வேலையா?

அந்த வகையில் ஆரம்ப காலத்தில் கொழு கொழுவென இருந்த குஷ்புவை பலருக்கும் நினைவில் இருக்கலாம். ஆனால் அண்மையில் இவர் உடல் எடை குறைத்து மிகவும் பிட் ஆன தேகத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் இளமையாக காட்சியளித்து அனைவரையும் அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் பிசியான இவர் அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார். இவரோடு இணைந்து தமன்னா, ராசி கண்ணா இருவரும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் இணைந்து இந்த படத்தில் குத்தாட்டம் போட்டு இருக்கின்ற தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது.

வாய் பிளந்த ரசிகர்கள்..

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த வயசுல பண்ணற வேலையா? இது என்று வாயை பிளந்து வருகின்றனர். மறுபக்கம் குண்டாக இருந்த குஷ்பூ சமீபத்தில் உடல் எடை குறைத்து ஒல்லியான கதை இதற்குத்தானா? என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே குண்டாக இருக்கும் போதே நடனத்தில் அசத்திய குஷ்பு ஒல்லியான பிறகு கேட்கவா? வேண்டும். கடினமான நடன அசைவுகளை கூட அசால்டாக ஆடி ஒட்டு மொத்த படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி படத்துல நடிச்ச அங்கவை, சங்கவை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. மிரண்டுருவீங்க..!

இதனை அடுத்து குஷ்புவின் நடனத்தை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக வாய்ப்பிழப்பார்கள் என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அரண்மனை 4 திரைப்படத்தில் குஷ்புவின் அதிரடி நடனத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கொண்டையில் தாழம்பூ கூடையில் வாழைப்பூ என்ற பாடலை பாடி குஷ்புவின் நடனத்தை பார்க்க தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top