Connect with us

News

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதை பண்ண சொல்லி கேட்டேன்.. ஆனால்.. கணவர் குறித்து குஷ்பூ ஓப்பன் டாக்..!

By TamizhakamJuli 14, 2024 7:39 PM IST

இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகளில் நடிகை குஷ்பூவும் ஒருவர் வட இந்தியாவில் இருந்து தமிழ் துறைக்கு திரையில் வாய்ப்பை தேடி வந்தவர் நடிகை குஷ்பூ.

தமிழில் பேச தெரியவில்லை என்றாலும் கூட  குஷ்பூ தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து நடிகை குஷ்பூவிற்கும் அதிக வாய்ப்புகள் கிடைத்தது தொடர்ந்து குஷ்பூ நடித்த நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தது அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக உள்ள கார்த்தி ரஜினி, கமல், சத்யராஜ் மாதிரியான முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் குஷ்பூ.

சினிமாவில் எண்ட்ரி:

அப்போதைய காலகட்டங்களில் பிரபலமாக இருந்த முக்கால்வாசி நடிகர்களுடன் குஷ்பூ நடித்து விட்டார். அதற்குப் பிறகுதான் அவருக்கு இயக்குனர் சுந்தர் சியுடன் காதல் ஏற்பட்டது. முறைமாமன் திரைப்படத்தை சுந்தர் சி இயக்கும்போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் குஷ்பூ.

அப்போது முதலே அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டானது. அதனை தொடர்ந்து குஷ்பூவை திருமணம் செய்து கொண்டார் சுந்தர் சி இந்த நிலையில் இவர்களது காதல் வாழ்க்கையில் ரொமான்ஸ் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் குஷ்பூ .

தில் அவர் கூறும் பொழுது ரொமான்ஸ் என்றால் என்னவென்று எனது கணவனுக்கு தெரியாது. ரொமான்ஸ் வார்த்தையின் முதல் எழுத்து R என்பது கூட அவருக்கு தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு மோசமாக இருப்பார்.

சுந்தர் சியின் ரொமான்ஸ்:

கேண்டில் லைட் டின்னருக்கு செல்வோம் என்று எனது கணவரை அழைத்தால் அவர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் முகம் எப்படி தெரியும் அதற்கு வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டு விடலாமே என்று கேட்பார். சரி ஒரு ரொமாண்டிக் டிரைவ் செல்வோம் என்று அழைத்தால் இல்லை சளி பிடித்திருக்கிறது.

கார் ஓட்டுவது கடினம் வீட்டிலேயே ரொமான்டிக்காக பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிடுவார். அவரை பொறுத்தவரை ரொமாண்டிக் என்பதெல்லாம் கடற்கரையில் சென்று அமர்ந்து கொண்டு இருவரும் கைகோர்த்துக்கொண்டு சுண்டல் சாப்பிட்டு கொண்டிருக்க வேண்டும். அவர் வாங்கித் தரும் மல்லி பூவை நான் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

ஆனால் நாங்கள் இருவருமே பிரபலம் ஒருவேளை நாங்கள் இருவருமே கடற்கரைக்கு சென்றோம் என்றால் அங்கு கூட்டம்தான் கூடும் எனவே அதற்கெல்லாம் வாய்ப்பு கிடையாது அதனால் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் எங்கள் வாழ்க்கையில் நடந்ததில்லை என கூறுகிறார் நடிகை குஷ்பூ

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top