லட்சுமி மேனன், (Lakshmi Menon)டைரக்டர் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நடிகர் சிவாஜி கணேசன் பேரனும்,. நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவும் இந்த படத்தில்தான் அறிமுகமானார்.
யானையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மெகா ஹிட் படமாக அமைந்தது. பாடல்களும் செம ஹிட் ஆனது.இதைத்தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, கொம்பன், நான் சிவப்பு மனிதன், குட்டிப்புலி, மஞ்சப்பை, ஜிகர்தண்டா,வேதாளம், றெக்க, மிருதன், புலிக்குத்தி பாண்டி,ஜெமினி கணேசன், சிப்பாய், மலை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
Lakshmi Menonகேரளா, கொச்சியை சேர்ந்தவர் லட்சுமி மேனன். சினிமாவில் மலையாள படத்தில், ரகுவிண்டே ஸ்வாந்தம் ரசியா என்ற படத்தில், 2011ம் ஆண்டில் அறிமுகமானார். அதன்பின்தான், தமிழில் கும்கி படத்தில் அறிமுகமானார்.
இவர் நடிகை மட்டுமல்ல, நடனக் கலைஞர், பாடகியாகவும் இருக்கிறார்.கும்கி, சுந்தரபாண்டியன் படங்களில் நடித்ததற்காக, தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருது பெற்றவர். தவிர விஜய் விருது,விகடன் விருது,பிலிம்பேர் விருது,சைமா விருது என பல விருதுகளை பெற்றவர்.
மலையாளத்தில், லட்சுமி மேனன் முதல் படத்தில் நடித்த போது, அவர் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்திருக்கிறார். அதன்பின்பு, கும்கியில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
Lakshmi Menonதமிழில் சசிக்குமார், விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்து, இன்னும் ரசிகர்களுடன் மிக பிரபலமானார். மேலும், வேதாளம் படத்தில், அஜித்குமார் தங்கையாகவும் நடித்திருந்தார்.
படமும் செம ஹிட் ஆனது. குட்டிப்புலி, ஜிகர்தண்டா, றெக்க போன்ற படங்களில், லட்சுமி மேனன் கேரக்டரை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.ஒரு கட்டத்தில், நடிகர் விஷால், லட்சுமி மேனனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, வேகமாக தகவல் பரவியது.
ஏனெனில் நான் சிவப்பு மனிதன், பாண்டிய நாடு படங்களில் அவர்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததால், இந்த தகவல், கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
Lakshmi Menonகும்கியை தொடர்ந்து, சில படங்களில் இளமை, அழகை, உடல்வாகை நல்ல முறையில் பராமரித்த லட்சுமி மேனன், பிறகு வெயிட் போட ஆரம்பித்தார். றெகக படத்திலேயே சற்று குண்டான உடல் தோற்றத்துடன் லட்சுமி மேனன் காணப்பட்டார்.
அதனால், அவருக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துபோய் விட்டன என்றும் கூறப்படுகிறது. மற்ற மொழி படங்களிலும் அவர் வாய்ப்பை தேடி வருவதாக கூறப்படுகிறது.
Lakshmi Menonஇந்நிலையில், நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் முன்னும் பின்னும் அசைந்துகொண்டு சிரிக்கும் லட்சுமி மேனனின் வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை சினிமாவில் கூட இப்படி நீச்சல் உடையில் நடிக்காத லட்சுமிமேனன் இப்படி இன்ஸ்டாகிராமில், படு கவர்ச்சியான நீச்சல் உடையில், குளத்தில் நீச்சலடித்து குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.