Connect with us

News

என்னை கட்டிலில் தூக்கி போட்டு.. அப்படி நடந்து கொண்டார்.. துடுப்பாட்ட வீரர் மலிங்கா மீது சின்மயி குற்றச்சாட்டு..!

By TamizhakamJuly 13, 2024 11:11 AM IST

1984 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி பிறந்த சின்மயி ஸ்ரீ பதா தமிழ் திரைப்பட பின்னணி பாடகியாக விளங்குகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் போட்டியை தொகுத்து வழங்கியவர்.

மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு சென்னையில் ஒளிபரப்பாகும் ஆகா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஆகா காபி கிளப் எனும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பணிபுரிந்து இருக்கிறார்.

பாடகி சின்மயி..

பாடகி சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடினார் இந்த பாடல் தான் திரை உலகில் இவர் முதலில் பாடிய பாடலாகும்.

இதனை அடுத்து எனக்கும் உனக்கும், பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டைக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வகையான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சிறந்த பாடகி என்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் கூட. இவர் சக்கரக்கட்டி படத்திற்கு வேதிகாவிற்கும் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சமீரா ரெட்டிக்கும் பின்னணி குரல் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

பாடகி சின்மயியை பொறுத்த வரை இவர் ஏ ஆர் ரகுமானின் இசையில் நிறைய பாடல்களை பாடியுள்ளதோடு தமிழ் திரையுலகில் வாலியை அடுத்து தனக்கு என்று ஓர் அடையாளத்தை பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார்களை கூறியிருக்கிறார்.

என்னை கட்டிலில் தூக்கி போட்டு அப்படி..

மேலும் மீடு புகார்களை பற்றி அதிகளவு விஷயங்களை வெளியிட்டு அனைவரையும் திக்கு முக்காட வைத்தார்.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் மலிங்கா ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை தனது எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயி பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருவதை அடுத்து அந்த பதிவில் அவர் என்ன சொல்லி இருந்தார் என்று விரிவாக பார்க்கலாம்.

ஒரு முறை பாடகி மும்பை சென்றிருந்தபோது தன்னுடைய தோழியை பார்க்க அவள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்ற போது அந்த ஹோட்டலில் கிரிக்கெட் வீரர் மலிங்காவை பார்த்து இருக்கிறார்.

இதனை அடுத்து அவர் எனது தோழி அவரது அறையில் இருப்பதாக கூறியதால் அவரை சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை. உடனே மலிங்கா என்னை படுக்கை அறையில் தள்ளி தவறாக நடந்து கொள்ள முயன்றார்.

அந்த சமயத்தில் நான் என்னுடைய கண்கள் மற்றும் வாயை மூடிக்கொண்டேன். ஆனால் அவர் என் முகத்தை பயன்படுத்திக் கொண்டார் என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

துடுப்பாட்ட வீரர் மலிங்கா மீது குற்றச்சாட்டு..

மேலும் அந்த சமயத்தில் ஹோட்டல் ஊழியர் வந்து கதவைத் தட்ட நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அவர் பிரபலம் என்பதால் நான் வேண்டுமென்றே அவரது ரூமுக்கு சென்று இருப்பேன் என்று சொல்லி இருப்பார்கள் என்று அந்த பெண் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இந்த தகவலை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top