நடிகை திரிஷா (Actress Trisha) பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவையாக நடித்து, அசத்தினார். இவரைப்போலவே, பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்து அசத்திக்கொண்டு இருக்கின்றனர். அப்படி நடிப்பில் முன்னணியில் இருக்கும் அவர்கள், படிப்பில் எந்த அளவில் இருக்கிறார்கள் என்பது இப்போது, வைரலான கேள்வியாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவை பொருத்த வரை, முன்னாள் முதலமைச்சர் , மக்கள் திலகம் எம்ஜிஆர் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டையே ஆட்சி செய்த கர்ம வீரர் காமராஜர் படிக்காத மேதை எனறு அழைக்கப்படுகிறார். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனும், இளம் வயதிலேயே, நடிப்புத்துறைக்குள் வந்தவர். ரஜினி, கமல் போன்றவர்களும் டிகிரி போன்ற பட்டப் படிப்புகளை படிக்காதவர்கள்தான்.
Nayantharaஆனால், இன்று அவர்கள் தொட்டிருக்கும் உயரம், படிப்புக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை. உ:றுதியான உழைப்பும், உண்மையும் இருந்தால் வாழ்க்கையில், எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கின்றனர்.
ஆனால், அதே வேளையில், கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பொன்மொழியும் மிகவும் மதிப்பு வாய்ந்தது.அந்த வகையில்,. இப்போது சில நடிகையர் என்ன படித்திருக்கின்றனர், எந்த கல்லூரியில் படித்தனர் என்ற விவரம் வெளியாகி உள்ளது. தனது அபிமான நடிகை என்ன படித்திருக்கிறார் என, மிக ஆர்வமாக ரசிகர்கள் இந்த தகவலை படித்து பகிர்வதால் மிக வேகமான இந்த செய்தி வைரலாகி வருகிறது.
Tamannaநடிகை தமன்னா, பி.ஏ ( பேச்சலர் ஆர் ஆர்ட்ஸ்) – மும்பை, நேஷனல் கல்லூரியில் படித்திருக்கிறார். நடிகை அனுஷ்கா, பி.சி.ஏ., மவுண்ட் கார்மெல் கல்லூரியில் படித்திருக்கிறார்.
நடிகை சாய்பல்லவி, எம்பிபிஎஸ், ஷார்ஜியாவில் உள்ள ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிடியில் படித்திருக்கிறார். அதாவது, நடிகை சாய்பல்லவி ஒரு டாக்டர்.தமிழ் சினிமா ரசிகர்களின் அபிமான நாயகி குந்தவை, திரிஷா, எத்திராஜ் பெண்கள் கல்லூரியில், பிபிஏ முடித்திருக்கிறார்.
Sai Pllaviநடிகை நயன்தாரா, மார்தோமா கல்லூரியில், பிஏ ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார். நடிகை சமந்தா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், பி.காம்., காமர்ஸ் படித்திருக்கிறார்.
காஜல் அகர்வால், மும்பை, கேசி கல்லூரியில், மாஸ் மீடியா டிகிரி படித்தவர். ராகுல் பிரீத்தி சிங், ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில்,. பி.எஸ்.சி., மேத்மெடிக்ஸ் படித்திருக்கிறார். நடிகை அமலா பால், செயின்ட் தெரசாஸ் கல்லூரியில், பிஏ கம்யூனிகேடிவ் ஆங்கிலம் படித்திருக்கிறார்..
Priya Bhavani Shankarஇந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் தமன்னா துவங்கி அனுஷ்கா, நயன்தாரா, சாய்பல்லவி, திரிஷா, சமந்தா, ராகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால், அமலாபால் என, பலரும் படித்த பட்டதாரிகளாக இருக்கின்றனர்.
அதிலும், சாய்பல்லவி டாக்டராக படித்து இருக்கிறார். சாய்பல்லவி, அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கொண்ட மருத்துவமனை கட்டும் பணியில் தீவிரமாக உள்ளதும் ரசிகர்கள் அறிந்ததே.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Loading ...
- See Poll Result