Connect with us

News

பல்லி உடலில் எங்கு விழுந்தால் என்னென்ன பலன்கள்.

By TamizhakamApril 28, 2022 11:22 AM IST

நம் நாட்டில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளது. காக்கை நம் வீட்டின் முன் அமர்ந்து சத்தம் போட்டால் உறவினர்கள் வருவார்கள் .காக்கைக்கு உணவு வைப்பதும் நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம் இது போன்ற பல சாஸ்திர விதிமுறைகளை கடைப்பிடிக்கிறோம். 

 

அதுபோல் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்து பலன்களை நம் முன்னோர்கள் கணித்து வைத்து கூறியிருக்கிறார்கள். அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய தான் இந்த பல்லி நம் மீது பத்து இடங்களில் விழுவதால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

 

பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள்

 

தலையில் விழுந்தால்…

 

பல்லி தலையில் விழுந்தால் அவருக்கு வர இருக்கும் கெட்ட நேரத்தை அது குறிக்கிறது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையை நாம் அனுசரித்து போவது மிகவும் நல்லது. 

 

அதுபோல பல்லி தலையில் விழுவதால் கடும் எதிர்ப்பு, மனநிம்மதி இல்லாமை ஏற்படும். தலையில் பல்லி விழுவதால் அவரை உறவினரோ அல்லது தெரிந்தவர் மரணமடையலாம். இதனால் மன அமைதி இழந்து இருப்பர் இது போன்ற கெட்ட சகுனம் பல்லி தலையில் விழுவதன் மூலம்  ஏற்படலாம். 

நெற்றியில் விழுந்தால்…

 

பல்லி நெற்றியில் விடுவது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும் வலது பகுதியில் விழுந்தால் லக்ஷ்மி கடாட்சம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

 

தலைமுடியில் விழுந்தால்…

 

தலைமுடியில் விழுந்தால் நன்மை நடக்கும். ஆனால் தலையில் விடக்கூடாது. முகத்தில் பல்லி விழுந்தால் அவர்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவார்கள் என அர்த்தமாகும். 

 

புருவத்தில் விழுந்தால்…

 

புருவத்தில் பள்ளி விழுந்தால் ராஜ பதவியில் எனும் உயர் பதவியில் அவரை தேடி வரும் என்று கூறுவார்கள். அதுவே அவரது கண்கள் அல்லது கன்னங்களின் மீது பல்லி விழுந்தால் ஏதோ ஒரு காரணத்துக்காக நீங்கள் தண்டிக்க படக்கூடும் என்பதை உணர்த்தும். 

 

கை,காலில் விழுந்தால்…

 

இடது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பது ஐதீகம். வலது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தமாம். 

 

பாதத்தில் பல்லி விழுந்தால்…

 

வருங்காலத்தில் நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தம் தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் மிகவும் விலைமதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், வைடூரியம் போன்ற பொருட்களை நீங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். 

 

தொடையில் பல்லி விழுந்தால்…

பெற்றோர் வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்தீர்கள் என சாஸ்திரம் கூறுகிறது. வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும். அதே அது இடது மார்பின் மீது விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கும்.

 

இடதுபக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும் வலது பக்கத்தில் அதே பல்லி விழுந்தால் பக்கத்தில் இருப்பவருடன் பகை உண்டாகும்.

 

 நம் உடலின் எந்த பாகத்திலும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விட வேண்டும் குளித்த பின்னர் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்தால் எந்த செயலும் நடந்துவிடக்கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்கம் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்கி இந்த நிலையில் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம்.இந்த பல்லிகளை வணங்கினால் வருங்கால த்தில் ஏற்படும் சோகங்களை நீக்கி நமக்கு நன்மை கிடைக்கும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top