“சில நாள் முன்பு தானே அந்த வார்த்தையை சொன்னாரு..” லொள்ளு சபா சேசு குறித்து வெளியான தகவல்..!

பல தனியார் தொலைக்காட்சிகள் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை மக்களை கவரக்கூடிய வகையில் ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியை யாரும் மறக்க முடியாது.

இதையும் படிங்க: அந்த விஷயம் எப்போ தேவையோ.. அப்போ கல்யாணம் பண்ணிக்கிறேன்.. கூச்சமின்றி பேசிய நடிகை கௌசல்யா..

அந்த வகையில் லொள்ளு சபாவில் பங்கேற்ற சேசு பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவர் பற்றிய சில பகீர் தகவல்கள் தற்போது வெளி வந்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லொள்ளு சபா..

லொள்ளு சபாவில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய லொள்ளு சபா சேசு இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

மேலும் லொள்ளு சபாவில் இவருடைய டைமிங் காமெடி மூலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து இவர் முதல் முதலாக துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் தொடர்ந்து நடித்த இவர் ரசிகர்கள் விரும்பும் பிரபலமாக மாறியதோடு விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டார்.

மாரடைப்பால் மருத்துவமனையில் சேசு..

மேலும் இவர் அண்மையில் சந்தானத்தோடு இணைந்து A1 திரைப்படத்தில் நடித்த நடிப்பு பலரும் பாராட்டு கூடிய வகையில் இருந்தது. இதில் பேசிய டயலாக்குகள் பிரபலமாக மாறி ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆனது.

சமீபத்தில் வெளி வந்த வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் காமெடி காட்சிகளில் நடித்து அசத்தினார். தொடர்ச்சியாக லொள்ளு சபா, காமெடி பேட்டை போன்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

தான் சம்பாதித்து வைத்த பணத்தில் பலருக்கும் உதவி செய்து வந்த சேசுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வரை சேர்த்து சில பேட்டிகளில் கலகலப்பாக பேசியிருந்தார்.

வெளி வந்த பரபரப்பு தகவல்..

மேலும் இவர் பேசும் போது பல பிரபலங்களிடம் இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்ற வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போது மருத்துவமனையில் மாரடைப்பால் சிரமப்படுகின்ற விஷயத்தை அறிந்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.

அத்தோடு சில நாட்களுக்கு முன்பு நல்லதை செய்ய சொல்லி வலியுறுத்திய வார்த்தைகளை சொன்ன லொள்ளு சபா சேசு குறித்து தற்போது வெளியான தகவல் இணையங்களில் காட்டுத் தீயாய் பரவி வருவதோடு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

எனவே விரைவில் குணமடைந்து எப்போதும் போல பழைய நிலைக்கு இவர் திரும்பி வருவார் என்ற ஆவலில் ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …