நடிகை மைனா நந்தினி ( Myna Nandhini ) வெண்ணிலா என்னும் கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவருக்கு அடுத்த அடுத்த படம் வாய்ப்புகள் தமிழில் வர ஆரம்பித்தன.
நடிகை மைனா நந்தினி இவர் மதுரையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.இவர் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் கல்லூரி நாடகங்களிலும் பள்ளி நாடகங்களிலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்த மைனா நந்தினிக்கு அவ்வப்போது குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து தமிழில் முதல் முதலாக வெண்ணிலா கபடி குழு எனும் திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து இருந்தார். இதில் கிராமத்து பாடி லாங்குவேஜ் இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்ததன் மூலம் மக்களுக்கு இவரை வெகுவாக பிடித்திருந்தது. இதனை தொடர்ந்து வம்சம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் மற்றும் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.
Myna Nandhiniஇந்த படத்தில் சுனைனாவின் தோழியாக நடித்திருந்தார். நந்தினி இந்த படத்தின் ஒரு வசனம் மூலம் அனைத்து தமிழ் மக்களிடமும் கொண்டு போய் சேர்த்து விட்டது என்று சொல்லலாம்.
அந்த வசனம் என்னவென்றால் ஏமா அழகு புள்ள எங்க இருக்க என்ற வசனம் ஒரு கோர்வையோடு இழுத்துச் சொல்லுவார். அது கிராமப்புற மக்களிடம் வைரலாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நைனா நந்தினிக்கு நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.
Myna Nandhiniஇதனைத் தொடர்ந்து மைனா நந்தினிக்கு சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சரவணன் மீனாட்சி தொடரில் நடிகை ரஞ்சிதா அவர்களுக்கு தோழியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இதன் மூலமே சீரியல்களில் இவருக்கு அடுத்தடுத்த தொடர்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Myna Nandhiniஇதனைத் தொடர்ந்து காமெடி கில்லாடிஸ்,மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ,கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடம் வரவேற்பையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் பிரபல ஜிம் மாஸ்டர் ஒருவருடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிறகு இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு திருமணம் ஆன ஒரு மாதங்களிலேயே இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார் இது சோசியல் மீடியாக்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
Myna Nandhiniஇதனைத் தொடர்ந்து பழரது விமர்சனத்திற்கு உள்ளான நந்தினி அவர்கள் அதிலிருந்து மீண்டு மீண்டும் சின்னத்திரைகளில் நடிக்க ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகரான கார்த்திகேயன் என்பவரை மீண்டும் காதலித்தான் அவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டார்கள் மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். பழைய வாழ்க்கை முறையை மறந்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
View this post on Instagram
இந்த நிலையில் மைனா நந்தினி கவர்ச்சியான உடைகளில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் வலம் வருகிறார் நிறைய கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் இணையங்களில் வைரலாகும் வருகிறது. மேலும் இப்படியான வீடியோக்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் மைனா நந்தினி.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.