அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா? CWC இனி வேண்டவே வேண்டாம் விலகிய மணிமேகலை..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் பலரும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. 

இந்த நிகழ்ச்சிக்காக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஃபேன் சர்கிள் உள்ளது என்றால் அது மிகையல்ல. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அமக்கலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் போட்டியாளர்களாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா? 

இந்தப் போட்டியில் பங்கேற்றிருக்கும் மணிமேகலை 2009 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போதே சன் மியூசிக் வேலை பார்த்தவர். 17 வயது தான் அப்போது அவருக்கு. சுமார் 15 ஆண்டுகள் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக குக் வித் கோமாளிகளும் பணியாற்றி இருக்கிறார். 

மேலும் முதல் மூன்று சீசனில் கோமாளியாகவும் கடந்த இரண்டு சீசன்களில் தொகுப்பாளினியாகவும் இவர் பணியாற்றியது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த வகையில் இவர் ஆன்கராக முதலில் நுழைந்த நாளில் இருந்து வெளியேறும் வரை பல்வேறு வகையான டாமினேஷன்களை சந்தித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். 

எனினும் அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு தான் இத்தனை நாள் அதில் இருந்ததாகவும் என்னுடைய வேலையில் அடிக்கடி அவர் மூக்கை நுழைப்பதாகவும் இதனை ஓரிரு எபிசோடுகளில் தான் பொறுத்துக் கொண்டதாகவும் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை தெரிவித்திருக்கிறார். 

அதையும் தாண்டி தன்னுடைய வேலையில் தலையிடுவது தவறு தானே என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு அதை பார்த்து எப்படி சும்மா இருப்பது என்ற கேள்வியையும் கேட்டு இருக்கிறார்.

CWC இனி வேண்டவே வேண்டாம் விலகிய மணிமேகலை..

அந்த வகையில் இந்த போட்டியில் மணிமேகலை பங்கேற்று இருந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். மேலும் இந்த போட்டியில் போட்டியாளராக பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில் சனிக்கிழமை ஒளிபரப்பான இறுதிச்சுற்றின் முதல் எபிசோடு பாதியிலேயே பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இந்த எபிசோட்டின் பாதையில் இருந்தே அவர் வெளியேறிவிட்டார். 

இதற்குக் காரணம் போட்டியாளராக இருந்த ஆங்கர் பிரியங்கா பல்வேறு விஷயங்களை செய்ததை அடுத்து அதை டீமில் மணிமேகலை தெரியப்படுத்தி இருக்கிறார். அத்தோடு அது பற்றி அவரிடமே நேரில் பேசி இருக்கிறார். உடனே அது எப்படி நான் ஒரு சீனியர் என்னிடம் நீ எப்படி சொல்லலாம் என்று கேட்டிருக்கிறார். 

வேகமாக வளர்ந்த டாமினேஷன்..

இந்நிலையில் மணிமேகலை தன்னை பற்றி எதுவும் கூறக்கூடாது என்பதில் ஸ்டிக் ஆக பிரியங்கா இருந்திருக்கிறார். மேலும் பிரியங்கா சொல்லும் படி தான் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கிறார். அதற்கு நான் நோ என்று சொல்லிவிட்டேன். 

எனினும் அவர் பேசுவதை கேட்டால் நிறைய ஷோக்கள் கிடைக்கும். நல்ல பெயர் கிடைக்கும் உங்கள் கேரியர் உச்சிக்கு போகும் இல்லையென்றால் அது பாதிப்படையும் என்பது போல அவர் பேசியிருக்கிறார். 

அத்தோடு அவருக்கு அடங்கி நடத்தால் இது போன்ற விஷயங்கள் எளிதில் கிடைக்கும் என்று கூறியது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இப்படி ஒரு வேலையை நான் செய்யவே வேண்டாம்.அதற்கு வீட்டில் சும்மாவே இருந்திருக்கலாம். 

எனவே இனிமேல் எல்லா நிகழ்ச்சிகளும் அவங்களே தொகுத்து வழங்கட்டும் என்று ஓபனாக பேசி அந்த நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை விலகி விட்டார். இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …