Connect with us

News

புருஷன் பொண்டாட்டிக்குள்ள இந்த விஷயம் மட்டும் இருக்கவே கூடாது.. மஞ்சிமா மோகன் ஒரே போடு..!

By TamizhakamJuly 31, 2024 8:00 PM IST

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டு அறிமுகமானார் மஞ்சிமா மோகன். அதற்கு பிறகு அவருக்கு மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

தொடர்ந்து வெகுகாலங்களாக மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடித்து வந்து கொண்டிருந்தார். மிக தாமதமாகதான் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இவருக்கு முதன்முதலாக வாய்ப்பை கொடுத்தார்.

மஞ்சிமா மோகன் அறிமுகம்:

அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில்தான் முதன்முதலாக நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானார் மஞ்சுமா மோகன். பொதுவாக உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களை வெகுவாக விமர்சனம் செய்வதை பார்க்க முடியும்.

 

ஆனால் மஞ்சிமா மோகனை பொருத்தவரை அப்படியான கேலிக்கு அவர் உள்ளாகவில்லை. மாறாக தொடர்ந்து அதிக வரவேற்பைதான் பெற்றார். அதற்கு பிறகு சத்ரியன் என்கிற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்தார்.

இப்படியாக தமிழில் நடித்துக் கொண்டிருந்த பொழுது தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக தேவராட்டம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

காதல் திருமணம்:

அப்போது முதலே நடிகர் கௌதம் கார்த்திக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சீக்கிரத்திலேயே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன்.

திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு கௌதம் கார்த்திக் எந்த ஒரு தடையும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது திருமணத்திற்குப் பிறகு நான்தான் அதிகமாக கோபப்படும் ஒரு ஆளாக இருந்திருக்கிறேன். கௌதம் கார்த்திக் எப்பொழுதுமே கோபமே பட மாட்டார். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை அவர் கோபப்பட்டாலே பெரிய விஷயம் என்றுதான் கூற வேண்டும்.

ஏதாவது சண்டை எங்களுக்குள் வந்தால் கூட அவர் அமைதியாகிவிடுவார். பெரும்பாலும் சண்டை போடுவது மாதிரியான பேச்சுக்கள் வந்தாலே அவர் அந்த பேச்சை தடுத்து நிறுத்தி விடுவார். நான் தான் எப்போதும் கோபப்பட்டு கொண்டே இருப்பேன். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை சண்டை என்பது அதிகமாக இருக்கக் கூடாது. ஒருவருக்கு ஒருவர் புரிதல் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் மஞ்சிமா மோகன்

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top