Connect with us

News

அதுக்குள்ள எப்படி..? – இரண்டாவது திருமணம் குறித்து வாயை திறந்த நடிகை மீனா..!

By TamizhakamMärz 22, 2023 3:07 PM IST

நடிகை மீனா திருமணம் குறித்த தகவல்கள் கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது குடும்ப நண்பருடம், பிரபல தொழிலதிபருமான ஒருவரை நடிகை மீனா இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

உச்சகட்டமாக நடிகர் தனுஷ்-ஐ இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை மீனா என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த ஜூன் 29ஆம் தேதி நடிகர் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு மாற்று நுரையீரல் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால் அவருக்கு மாற்று உறுப்பு கிடைக்காத நிலையில் கடந்த கடந்த ஜூன் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், நடிகை மீனாவின் 40 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக சமீபத்தில் மீனா 40 என்ற விழா எடுக்கப்பட்டது.

அதில் பல்வேறு தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர் அதில் இப்படியான ஒரு சந்தோஷமான தருணத்தில் என்னை பெற்ற தந்தையையும் கணவரையும் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று பேசி இருந்தார்.

இந்நிலையில், நடிகை மீனா இரண்டாவது திருமணம் குறித்த பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பிரபல தொழிலதிபர் ஒருவரை நடிகை மீனா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கடைசியாக நடிகர் தனுஷுக்கும் மீனாவுக்கும் திருமணம் என வதந்தி பரவியது.

இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய நடிகை மீனா, என்னுடைய கணவர் இன்று இல்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.

ஆனால் அதற்குள் இப்படியான விஷயங்கள் எல்லாம் எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை. தற்போதைக்கு என்னுடைய மகளின் எதிர்காலம் மற்றும் திரைப்படங்களை தேர்வு செய்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளக்கூடிய எண்ணமே என்னிடம் இல்லை என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை மீனா. இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top