Connect with us

News

ரெண்டாம் தாரமாக தன்னை பெண் கேட்டு வந்த முன்னணி நடிகர்..! – மீனா கொடுத்த பதில்..! – பரபரப்பு தகவல்..!

By TamizhakamDezember 4, 2023 9:10 PM IST

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

குண்டாக இருக்கும் ஹீரோயின்கள் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க முடியாது என்ற பிம்பத்தை உடைத்துக் காட்டியவர் நடிகை மீனா. உச்சகட்டமாக பொசு பொசு என இருந்தாலும் கூட டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை பாடாய் படுத்திருக்கிறார்.

இப்படி ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து நைனிகா என்ற பெண் குழந்தைக்கு தாயுமானார் நடிகை மீனா.

அதன் பிறகு திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வந்த இவருக்கு திடீரென இடியாய் விழுந்தது இவருடைய கணவரின் மரண செய்தி. நுரையீரல் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவருடைய மருத்துவர் அவருடைய கணவர் முறையான சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.

இதனை தொடர்ந்து மீனா தன்னுடைய குழந்தையை தனியாக வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். மீனாவின் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பலரும் அவரை இரண்டாவதாக இன்னொரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது.

இதனை ஒரு பேட்டியில் நடிகை மீனாவே பதிவு செய்திருக்கிறார். ஆனால், இப்போதைக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு கிடையாது. ஏனென்றால் என்னுடைய கணவர் வித்யாசாகர் இப்போது என்னுடன் இல்லை என்ற விஷயத்தை என்னால் நம்ப முடியவில்லை. அப்படி இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் பற்றி எல்லாம் யோசிக்கக்கூட முடியவில்லை என்று தன்னுடைய இரண்டாம் திருமணம் பற்றிய கேள்விகளுக்கு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் நடிகை மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதற்காக பெண் கேட்டு சென்ற நடிகர் அதற்கு மீனா வீட்டில் கொடுத்த பதில் என்ன என்பது பற்றிய பதிவுதான் இதில் நாம் பார்க்க போகிறோம்.

நடிகை மீனா நடிகர் சரத்குமாரின் இரண்டு படங்களில் தொடர்ச்சியாக ஹீரோயினாக நடித்த அப்போது நடிகை மீனாவின் அழகில் கிறங்கிப் போன நடிகர் சரத்குமார் அவரை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார்.

ஆனால், சரத்குமார் ஏற்கனவே சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். என்றாலும் நடிகை மீனா உடனே மறுக்க முடியாமல் என்னுடைய வீட்டில் பேசிக்கொள்ளுங்கள் என்று சூசகம் காட்டியிருக்கிறார்.

ஏனென்றால் நேரடியாக வேண்டாம் என்று சொன்னால் ஏதேனும் பகையாய் முடிந்து விடுமோ..? என்ற எண்ணத்தில் என்னுடைய வீட்டில் பேசிக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார் நடிகை மீனா என தெரிகிறது.

இதனை தொடர்ந்து மீனாவின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்றிருக்கிறார் சரத்குமார். ஆனால், அவருடைய அம்மா மீனா இப்போதுதான் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் சினிமாவில் இன்னும் நிறைய பயணிக்க வேண்டி இருக்கிறது.

இப்போதைக்கு திருமணம் என்ற எந்த யோசனையும் எங்களிடம் இல்லை என்று கூறி நடிகர் சரத்குமார் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறார்.

புரிந்து கொண்ட சரத்குமார் தொடர்ந்து மீனாவை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு பதிவு செய்திருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top