Connect with us

News

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்காக ரயில்வே நேரத்தை மாற்றி அமைத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்.

By TamizhakamMärz 19, 2023 2:05 PM IST

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் இல் தனது இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை 19-3- 2023 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் ‹லைட் மேன்› களுக்காக நடத்தப்படும் ஒரு பிரத்தியேகமான இசை நிகழ்ச்சி.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு ஊக்கத்தொகையை மக்களிடமிருந்து பெற்று அதனை அன்பளிப்பாக தன்னுடன் பணியாற்றியவரும் அனைவருக்காகவும் சமர்ப்பிப்பார்.

இது மாதிரி நிகழ்ச்சி இந்தியாவிலும் உலக அளவில் நடத்தி வந்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். அதுபோலவே தற்சமயம் லைட் மின்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியை அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நிறைய ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் போன்ற அனைத்து மக்களும் கலந்து கொள்ள இருப்பதால் இரவு 11 மணி வரை இருந்த ரயில்வே நேரத்தை தற்சமயம் 12 மணி நேரம் வரை அதிகரித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
இது இசை பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செய்தியை அறிந்த அனைவரும் ரயில்வே குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top