விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை சந்தியாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த விஷயத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் வருங்கால கணவரோடு நடந்து முடிந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்நடிகை சந்தியாகிறார்.
சீரியல் மாமியார் மருமகள் நிஜத்தில்..
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை சந்தியா ஆரம்பகாலத்தில் ஆதித்யா டிவியில் காலேஜ் டாட் காம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.
மேலும் சன் டிவியில் கண்மணி, விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நாயகி ஆக திகழ்கிறார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்ற சீரியலில் கதாநாயகனின் அண்ணன் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் முரளி கிருஷ்ணா என்பவரோடு தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்த விஷயத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு அந்த மாப்பிள்ளை பற்றிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
மெட்டி ஒலி நடிகைக்கு மருமகளாக..
அந்த வகையில் அவர் திருமணம் செய்து கொள்ளக்கூடிய மாப்பிள்ளை யார் என்று தெரிந்தால் நீங்கள் அசந்து போவீர்கள். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு யார் என்று எளிதில் கண்டுபிடிக்க முடியும் என நினைக்கிறோம்.
அந்த வகையில் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் முரளி கிருஷ்ணா மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகை சாந்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சாந்தி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானவர்.
இதில் ஒரு அற்புதமான ஒற்றுமை உள்ளது அது என்னவெனில் சக்திவேல் சீரியலில் நடிகை சந்தியாவிற்கு ரீல் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கும் சாந்தி இனி ரியல் மாமியாராக போகிறார் என்ற ஒற்றுமை தான் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.
அத்துடன் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
விஜய் டிவி நடிகை..
இதனை அடுத்து விஜய் டிவியில் சீரியல் மாமியார் மருமகளாக நடித்துக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் அதே கேரக்டர்களை செய்ய இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
தற்போது இணையத்தில் அதிக அளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக இந்த ரீல் மற்றும் ரியல் மாமியார், மருமகள் கல்யாண கதை தான் சென்று கொண்டு உள்ளது என்று சொல்லலாம்.