Connect with us

News

என்னது.. எம்.ஜி.ஆருக்கு இவருடைய சிறுநீரகம் பொருத்தப்பட்டதா..? பரபரப்பு தகவலை வெளியிட்ட மருத்துவர்..!

Published on : August 10, 2024 5:38 AM Modified on : September 29, 2024 5:38 AM

திரைப்பட நடிகராகவும் தமிழ்நாட்டின் அரசியல் ஜாம்பவானாகவும் திகழ்ந்து வந்து கொண்டிருந்தவர். டாக்டர் எம்ஜிஆர்.

எம்.ஜி.ஆருக்கு இவருடைய சிறுநீரகம்:

இவரது அண்ணன் எம் ஜி சக்கரபாண்டியன் மகள் தான் லீலாவதி. எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லை எனக் கூறிய அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவருடைய அண்ணன் மகளான லீலாவதியின் கிட்னியை எடுத்து எம்ஜிஆருக்கு பொருத்தி அறுவை சிகிச்சை செய்ததாக பிரபல பத்திரிகையாளரும் மருத்துவரும், அரசியல் விமர்சகர்மான காந்தராஜ் சமீபத்தில் பேசியிருக்கிறார். அது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலனின்றி அமெரிக்காவுக்கு செல்கிறார்.

அப்போது அமெரிக்காவில் இருந்த மருத்துவர்களுடன் நீங்களும் இருந்தீர்கள்…அப்போது அவரின் சிகிச்சையின் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து காந்தராஜிடம் கேள்வி எழுப்பியதற்கு,

எம்ஜிஆருக்கு மூளையில் அடைப்பு ஏற்பட்டு கட்டி வந்துவிட்டது. அதன் பக்க விளைவாக அவருக்கு கை கால் விழுந்து விட்டது.

சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றதற்கான மிக முக்கிய காரணமே இங்கே ஏதாவது ஒன்னு கிடக்கு ஒன்று ஆகிப் போச்சுன்னா ஹாஸ்பிடலையே அடிச்சு நொறுக்கிடுவாங்க.

அந்த அளவுக்கு அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள். அதன் காரணத்தால்தான் அவர் அமெரிக்கா சென்று பாதுகாப்பான முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என காந்தராஜ் கூறியிருந்தார்.

மருத்துவர் பரபரப்பு தகவல்:

மேலும் பேசி அவர் எம்ஜிஆரை அமெரிக்கா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனதும் அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தார்கள்.

அதற்காக அவருடைய அண்ணன் மகளான லீலாவதி என்ற பெண்ணின் கிட்னியை தான் அவருக்கு பொருத்தினார்கள் .

அப்போது மருத்துவர்கள் அந்த பெண்ணின் கிட்னியை பொருத்த மறுத்துவிட்டார்கள். காரணம் அந்த பொண்ணு வாழ வேண்டிய வயசு நீங்க இவ்வளவு வயசானவர் அவ்வளவு சின்ன பொண்ணு கிட்னி எடுத்து உங்களுக்கு பொருத்த முடியாது என எம்.ஜி.ஆருக்கு ட்ரீட்மென்ட் செய்யவே அமெரிக்க மருத்துவர்கள் மறுத்து விட்டார்கள்.

பின்னர் அரசியல் அதிகாரத்தைக் கொண்டுதான் எம்ஜிஆர் க்கு அந்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், இந்த விஷயம் இன்று வரை வெளியில் தெரியவில்லை அந்த கிட்னியை கொடுத்த அவருடைய அண்ணன் மகளும் இதுவரை அந்த தகவலை குறித்து வெளியில் பேசவே இல்லை.

அந்த விஷயத்தை அப்படியே மறைத்துவிட்டார்கள். இது எம்ஜிஆர்க்கு தெரியாது தன்னுடைய அண்ணன் மகளின் கிட்னியை தான் தனக்கு எடுத்து பொருத்தினார்கள் என்று.

பின்னர் விஷயம் தெரிய வந்ததும். உடனடியாக கோயம்புத்தூரில் ஒரு ரைஸ்மில் வாங்கி தன்னுடைய அண்ணன் மகளுக்கு பரிசாக கொடுத்தார் எம்ஜிஆர்.

ஆனால் இந்த உண்மையை எம்ஜிஆர் இடம் மூடி மறைத்தது ஜானகி தான் என்று மருத்துவர் காந்தராஜ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஜெயலலிதா விஷயத்தில் இதுதான் நடந்தது:

அதன்பின் தொகுப்பாளர். முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவும் இதே போன்று தான் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை ஏன் இதுபோன்று மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லவில்லை? என கேள்வி இருப்பதற்கு ஜெயலலிதாவின் சிகிச்சையில் பல அரசியல் காரணங்கள் மறைந்து கிடந்தன.

குறிப்பாக அவரை பிரதமர் மோடி மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்று அவருக்கு தேவையான மருத்துவ வசதிகள்…தேவையான நடவடிக்கைகள் எடுக்கவே இல்லை.

அதில் உள்குத்து வேலைகள் பல இருக்கிறது. அது எல்லாம் வெளியில் சொல்ல முடியாது என காந்தராஜ் மிகவும் வெளிப்படையாக பேசினார்.

More in News

To Top