Connect with us

News

பேருக்கு தான் ஆம்பள.. ஆனா.. அந்த மேட்டர்ல.. ரகசியம் உடைத்த மோகினி..!

By TamizhakamJuly 15, 2024 4:00 AM IST

90-கால கட்டங்களில் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட 90-ஸ் நாயகி மோகினி ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் 1991-ஆம் ஆண்டு வெளி வந்த ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

நடிகை மோகினியின் ஸ்பெஷாலிட்டியே அவரது நீல நிற கண்கள் என்பதால் ரசிகர்கள் அனைவரும் அவரை பூனை கண்ணழகி என்று அழைத்து வந்தார்கள்.

பேருக்குத்தான் ஆம்பள..

தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட இவர் புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார்.

மேலும் நீ கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கி போனேன் என்ற பாடலால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர் இந்த பாடல் மூலம் இன்றுள்ள இளைய தலைமுறை மத்தியிலும் வாழ்ந்து வருகிறார்.

 

இந்நிலையில் மோகினி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறியதை அடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதனால் தற்போது அவர் அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறி இருக்கிறார். இவரது இயற்பெயர் மோகினி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன் என்பதாகும்.

ஆனா அந்த மேட்டர்ல..

1978-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி தஞ்சையில் பிறந்த இவர் தனது சிறந்த நடிப்பை சின்ன மருமகள் படத்தில் வெளிப்படுத்தியதை அடுத்து உடன் பிறப்பு, ஜமீன் கோட்டை, அந்த நாள், சேரன் சோழன் பாண்டியன் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். அத்தோடு அன்றே தொலைக்காட்சி சீரியல்களில் நடிச்ச பெருமை இவருக்கு உண்டு.

அந்த வகையில் சன் டிவியில் 1996 – ஆம் ஆண்டு ஒளிபரப்பான காதல் பகடை என்ற சீரியல் நடித்ததை அடுத்து 2006-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி என் தொடரிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேட்டி அளித்த நடிகை ரோகினி தனது முதல் படமான ஈரமான ரோஜாவே படத்தில் நடிக்கும் போது தனக்கு வயது 15 என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

அது மட்டுமல்லாமல் இவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் மாஸ்டர் பற்றி கூறிய விஷயம் தற்போது இணையங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ரகசியம் உடைத்த மோகினி..

இதற்குக் காரணம் சிவசங்கர் மாஸ்டர் பெயருக்கு தான் ஆம்பள.. ஆளால் அவர் வெளிப்படுத்தக்கூடிய முக பாவனைகள் நெளிவு சுளிவுகளை ஒரு நடிகையால் கூட வெளிப்படுத்த முடியாது.

அந்த அளவுக்கு பெண்மையை வெளிப்படுத்தி நடிக்கக் கூடியவர். அதுவும், பாடல் காட்சிகளில் வரக்கூடிய முகபாவனைகளை படிப்படியாக நடிகைகளுக்கு சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பார்.

ஒரு சிறந்த நடன இயக்குனர் அவர். அத்துடன் நன்கு கலகலப்பாக பழகக் கூடிய நபர். ஆனால், வேலை என்று வந்துவிட்டால் அப்படி வேலை வாங்குவார் என்று நடன இயக்குனர் சிவசங்கர் குறித்தான அதனுடைய அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் 90-ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி மோகினி.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top