சீரியல் நடிகை மைனா நந்தினி தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை தன்னுடைய நகைச்சுவையான பேச்சாலும் நேர்த்தியான நடிப்பாலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை மைனா நந்தினி.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சின்னத்திரையின் மூலம் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார். அதைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மைனா நந்தினி என்று பெயர் எடுத்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. தொடர்ந்து, சீரியல்கள் மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார் மைனா நந்தினி. சமீபத்தில் அரண்மனை 3 படத்தில் நடிகர் விவேக் ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் கமிட்டாகி வரும் மைனா நந்தினி இணையத்திலும் படுசுட்டி.
அடிக்கடி தனது கணவருடன் செய்யும் சேட்டைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி வரும் இவர் தற்போது சோபா செட்டில் தலைகீழாக படுத்துக்கொண்டு நான் தியானம் செய்கிறேன் என்று கணவரை கலாய்க்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அட பைத்தியமே எந்திரி என்று கணவர் கூறும் அந்த காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா ஃபுல் போதையா..? செம்ம ஃபன்..! என்று சகட்டுமேனிக்கு பங்கமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்
Loading ...
- See Poll Result