80களில் முன்னணி நடிகையாக வலம் வந்து நடிகை நதியா தற்பொழுதும் ஹீரோயின் போலவே இளமையுடன் நிற்கிறார் இவருடைய ரசிகர்கள் மற்றும் சக சினிமா நடிகைகள் கூட எப்படி இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் என்று இவரை தொந்தரவு செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
மனதில் மகிழ்ச்சியுடன் இருந்தாலே போதும் யார் மீதும் கோபம் கொள்ளாமல் எல்லோரும் சில காலம் தான் இருக்கப் போகிறோம் என்ற எண்ணம் மற்றும் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது எவ்வளவு தான் சோகம் இருந்தாலும் அதனை பற்றி கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் இளமையின் ரகசியம் என்கிறார் நடிகை நதியா.
தொடர்ந்து தொண்ணூறுகளிலும் சில படங்களில் நடித்து வந்த நடிகை நதியா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய திருமண வாழ்க்கையில் செட்டிலானார். சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் என்ற திரைப்படத்தில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கும் நடிகை நதியா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
இவருடைய மகள் மற்றும் இவர் நிற்கும் புகைப்படங்களை பார்த்தால் நிஜமாகவே அக்கா தங்கை நிற்பது போலத் தான் தெரியும். அந்த அளவுக்கு இன்னமும் இளமையாக இருக்கும் நடிகை நதியா கட்டம் போட்ட சட்டையில் குத்த வைத்திருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகல…. வயசு என்பது வெறும் நம்பர் தான்.. இளமை, முதுமை என்பது அவருடைய மனதை பொறுத்துதான் இருக்கிறது. அந்த வகையில் உங்களுக்கு இன்னும் வயது ஆகவில்லை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Loading ...
- See Poll Result