Connect with us

News

மனுஷனே கிடையாது.. சமந்தா மீது நாகசைதன்யாவுக்கு இவ்வளவு வன்மமா..? வெளியான தகவல்..! ரசிகர்கள் ஷாக்..!

Published on : August 9, 2024 7:27 AM Modified on : September 29, 2024 7:27 AM

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

நாக சைதன்யாவின் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் இரு வீட்டாரின் நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவியது.

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்:

நடிகை சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

இவர்கள் இருவரும் கடந்து சில மாதங்களாகவே ரகசியமாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அவர்கள் காதலிப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இதை இவர்கள் இருவருமே மறுத்தனர். குறிப்பாக சோபிதா துலிபாலா அப்படி எதுவுமே இல்லை… நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என காட்டமாக பதில் கொடுத்தார் .

ஆனால், தற்போது அதெல்லாம் அப்பட்டமான பொய் என்பதை நிருபிக்கும் வகையில் திடீரென இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு தாங்கள் காதலித்ததை உண்மை என அறிவித்து விட்டார்கள்.

விவாகரத்துக்கு பின் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய சமந்தா:

இந்த புகைப்படங்களை நாக சைதன்யாவின் தந்தையான நடிகர் நாக அர்ஜுன் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு புதிய மருமகளை அறிமுகம் செய்து வைத்தார்.

சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே அவர் பாலிவுட் பக்கம் சென்று அங்கு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

கவர்ச்சியான ரோல்களிலும் கிளாமரான காட்சிகளிலும் தயங்காமல் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் உச்சத்தை தொட வேண்டும் என மும்முறமாக நடிகை சமந்தா முயற்சித்து வருகிறார்.

அதற்காக தொடர்ச்சியாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படியான நேரத்தில் தான் சமூக வலைதளங்களில் நிச்சயதார்த்த செய்தி பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமந்தா ப்ரொபோஸ் செய்த நாளிலே நிச்சயதார்த்தம்:

இந்த நிலையில் அது குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. நேற்று ஆகஸ்ட் 8ம் தேதி நாக சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் நடக்க முக்கியமான காரணம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

அதாவது, நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா இதே ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று தான் நாக சைதன்யாவை காதல் ப்ரபோஸ் செய்தார்.

எனவே அந்த வன்மம் இன்னும் நாக சைதன்யாவிற்கு இருந்துள்ளது. அதனால் தான் தற்போது இருவரின் நிச்சயதார்த்தம் இதே தேதியில் நடந்துள்ளது என ரசிகர்கள் இணையத்தில் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

இதனை அறிந்த பலரும் நாக சைதன்யாவுக்கு சமந்தா மீது இவ்வளவு வன்மமா? அவர் மனுஷனே இல்லை என்றெல்லாம் விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More in News

To Top