Connect with us

News

சமந்தா விவாகரத்து குறித்து முதன் முறையாக வாயை திறந்த நாகர்ஜுனா – என்ன இப்படி சொல்லிட்டாரு..!

By TamizhakamSeptember 18, 2022 12:23 PM IST

நடிகை சமந்தா நாக சைதன்யா விவாகரத்து குறித்து வாயே திறக்காமல் இருந்த நடிகர் நாகார்ஜுனா சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்திருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள ஒரு வார்த்தை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதாவது நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு தான் என்னுடைய மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனை இப்பொழுதுதான் பழைய நாகசைதன்யா நாங்கள் பார்க்கிறோம் என்று கூறியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடும்ப குத்துவிளக்காக ஒருகாலத்தில் நடித்து வந்த நடிகை சமந்தா தற்போது கவர்ச்சி நடிகைகளே பயந்து ஓடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த நடிகை சமந்தா அந்த படத்தில் நடித்தபோது நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக திருமணம் செய்து கொள்ளும் முன்பே இரண்டு ஆண்டுகள் நாக சைதன்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார் நடிகை சமந்தா என்ற தகவலும் உண்டு. இந்நிலையில், திருமணம் செய்துகொண்ட சமரசம் செய்து தங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவருடைய மணவாழ்வு கசக்க ஆரம்பித்தது. திருமணத்திற்கு பிறகு படு கிளாமரான படுக்கையறை காட்சிகளில் நடிப்பது மோசமான காட்சிகளில் நடிப்பது என நடிகை சமந்தா அவரது குடும்பத்தினரை மிகவும் நோகடிக்க செய்துள்ளார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர் நிலையில் சமந்தாவுடன் அதுகுறித்து நடிகர் நாக சைதன்யா கூறுகையில் எங்களுக்கு எல்லாம் முடிந்துவிட்டது. அதை பற்றியெல்லாம் கவலைப்பட எனக்கு நேரம் கிடையாது எங்கள் வாழ்க்கையில் இனிமேல் எதுவும் இல்லை. எத்தனை தடவை சொன்னாலும் அதிலும் ஏதாவது ஒரு புதிதாக கண்டுபிடித்த கேள்வி கேட்பார்கள். சலிப்பாக இருக்கிறது இது பற்றி எதுவும் கேள்வி வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

இந்நிலையில், நாகார்ஜுனா இது குறித்து தன்னுடைய பதிவை கூறியிருக்கிறார். அதாவது, என்னுடைய முதல் சந்தோஷமே என்னுடைய மகன் தான். அவன் தற்போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறான். நான் எதிர்பார்ப்பது அவ்வளவுதான். எனக்கு அது போதும். நாகசைதன்யாவுக்கு ஏற்பட்ட அனுபவம் துரதிஷ்டவசமானது.

அவனுக்கு திருமணம் தோல்வியில் முடிந்தது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் தான். ஆனால், அதனால் தற்போது என் மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைக்கும் பொழுது எனக்கு எந்த விஷயமும் பெரிதாக தெரியவில்லை என்று கூறுகிறார் தன்னுடைய நடிகர் நாகார்ஜுனா.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top