Connect with us

News

முதன் முறையாக நீச்சல் உடையில் நந்திதா ஸ்வேதா..! – ரசிகர்கள் ஷாக்..!

By TamizhakamSeptember 27, 2022 3:01 AM IST

பிரபல இளம் நடிகை நந்திதா ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கும் இவர் அதில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்த திரைப்படத்தில் கிராமப்புற கல்லூரி மாணவியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

 

தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் ஹீரோயினாக குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனம் மிகப்பெரிய ரீச் ஆனது. அந்த வசனத்தில் இருக்கும் குமுதா என்ற பெயருக்கு சொந்தக்காரி நடிகை நந்திதா ஸ்வேதா தான். குமுதாவாக அதனுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நந்திதா.

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் மற்றும் நகைச்சுவை படமான முண்டாசுப்பட்டி உப்புக்கருவாடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக அவரது மனைவியாக நடித்திருந்தார்.

சில நிமிடங்களே தோன்றும் காட்சியாக இருந்தாலும் நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த படத்தில் நான் நடித்தேன் என்று கூறுகிறார் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் கொண்ட நந்திதா தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியிருக்கும் இவர் அதில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இதற்காக கணிசமான உடல் எடையையும் குறைக்க இருக்கிறார் நடிகை நந்திதா ஸ்வேதா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top